நடிகர் சங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, நடிகர்கள் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் இன்று (செப்.9) இறுதி விசாரணைக்கு வந்தன.
அப்போது, நடிகர்கள் விஷால், கார்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபீர், நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஏழுமலை, பெஞ்சமின் ஆகிய இருவரும், தேர்தலை தள்ளிவைக்கவும், தேர்தலை நடத்தவும் முடிவு செய்த பொதுக்குழு தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார்.
ஆறு மாதங்களுக்கு தேர்தல் தள்ளிவைக்க நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது என கூற முடியாது எனவும், தேர்தல் அலுவலரான ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், 2019ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிடும் வரை எந்த புகாரும் இல்லை. எந்த வழக்கும் தொடரப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிய மனு மீது எந்த முடிவும் அறிவிக்காததால் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த போது, உறுப்பினர்கள் சிலர் நீக்கப்பட்டுள்ளதாக கூறி, தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவு பிறப்பித்ததாகவும், சங்க உள் விவகாரங்களில் தலையிட பதிவாளருக்கு உரிமை உள்ளதா என்பது விவாதத்துக்குரியது என வாதிட்டார்.
பின், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடத்தப்பட்ட போதும், முடிவுகள் அறிவிக்கப்படவில்லை எனவும்,தேர்தல் நடவடிக்கைகளை எந்த வேட்பாளரும் எதிர்க்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
வாக்குச்சீட்டுகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதால், அதற்கு கட்டணமாக 2.5 லட்சம் ரூபாயை வங்கிதரப்பில் கோரப்படுகிறது என விஷால் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
வழக்கில் வாதம் முடிவடையாததால் அடுத்து விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
நடிகர் சங்க தேர்தல் வழக்கு: இறுதி விசாரணை ஒத்திவைப்பு - மெட்ராஸ் உயர்நீதி மன்றம்
சென்னை: தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் இறுதி விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.