ETV Bharat / state

தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்- காயத்ரி ரகுராம்

author img

By

Published : Sep 18, 2020, 2:11 PM IST

சென்னை: தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன் என இந்தி மொழிக்கு ஆதரவாக நடிகையும், தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாசாரத் தலைவியுமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்துள்ளார்.

actor and bjp member gayathri raghuram celebrate pm modi birthday

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை மதுரவாயிலில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு பாஜகவின் கலை மற்றும் கலாசாரத் தலைவியும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு 300 ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி சேலைகளை வழங்கினார்.

இந்தி மொழி கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 'தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்' எனும் வாசகம் பொருந்திய டி-சர்ட்டை வெளியிட்டு, 200 மாணவ - மாணவிகளுக்கு வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, இனிப்புகள் வழங்கி நரேந்திர மோடியின் பிறந்த நாளை கொண்டாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், " பிரதமர் மோடி தமிழ் மொழிக்கு எதிரானவர் அல்ல. வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் மொழியில் உள்ள திருக்குறளை சொல்லியே பேச ஆரம்பிப்பார். அதனால், அவர் தமிழ் மொழியை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறளும் தெரியாமல் தமிழும் தெரியாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: 'ஏன் பிறந்தாய் மகனே எனும் கேள்வி கேட்கும் நிலையில் பிரதமர்' - டிராபிக் ராமசாமி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.