ETV Bharat / state

விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து சொன்ன நடிகர் ஆனந்த் ராஜ்! - movie update

ராயர் பரம்பரை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சாதி, மதம், மொழி என எதுவும் பாராமல், அனைத்து மதத்தினரும் ஒன்றாக வேலை செய்யும் துறை என்றால் அது சினிமா தான் என்றும்; நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் நடிகர் ஆனந்த் ராஜ் கருத்து தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து சொன்ன நடிகர் ஆனந்த் ராஜ்

author img

By

Published : Jul 1, 2023, 5:35 PM IST

சென்னை: சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் தயாரித்து இயக்குநர் ராம்நாத் இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா நடித்துள்ள படம் ராயர் பரம்பரை. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஜூன் 30) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கிருஷ்ணா, ஆனந்த் ராஜ், லொள்ளு சபா ஜீவா, தயாரிப்பாளர் கே. ராஜன், நடிகை கிருத்திகா, தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் ராம்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.‌

நிகழ்ச்சி மேடையில் நடிகர் கிருஷ்ணா பேசுகையில், ''ரொம்ப ஸாரி. என்னால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை. 1.30 மணிநேரமாக காரில் தான் இருந்தேன். கரோனா முடிந்த பிறகு நான் நடிக்க ஒப்புக் கொண்ட படம் இது தான். நான் நிறைய படங்கள் நடித்திருக்கிறேன். இது எனக்கு வசதியில்லாத ஜார்னர். அதனால், இயக்குநரை நம்பி தான் இந்தப் படத்தில் நடித்தேன்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால் தான் எல்லாரும் வாழ முடியும். நான் சில படங்களில் சம்பளம் இல்லாமலே நடித்திருக்கிறேன். மேலும் எனக்குத் திரைத்துறையில் நம்பிக்கை கொடுத்த முதல் மனிதர் லொள்ளு சபா ஜீவா தான்'' என்று கூறினார்.

பின் நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் ஆனந்த் ராஜ், மனோபாலா, ஆர். என். மனோகர் இருவருக்கும் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்திப் பேசினார். ''இப்படியொரு கூட்டு முயற்சியைத் தான் நாங்கள் எதிர்பார்த்தோம். அனைத்து தயாரிப்பாளரையும் இனி நான் முதலாளி என்றும் அழைக்க இருக்கிறேன். நாங்கள் கற்றுக்கொடுக்கிற இடத்தில் இருக்கிறோம்.

இப்போதிருக்கும் இளைஞர்கள் கற்றுக்கொள்ளும் இடத்தில் இருக்கிறார்கள். நாம் மாற வேண்டுமா, கற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்டதற்கு, ஆம் நாமும் கொஞ்சம் மாற வேண்டும் என்று சொன்னேன். சினிமா கொஞ்சம் மாறி இருக்கிறது. ஹீரோயினை சகோதரி என்று சொன்னவர், இந்த இயக்குநர் தான். இந்த படம், ராஜன் சொன்ன மாதிரி, சிறிய படம் அல்ல.

இந்தப் படத்தில் நான் ஒன்றைத் தான் விரும்பி கேட்டேன். இதில் என் தாயாராக நடிக்கப் போகிறவர் யார் என்று?. அதைத் தெரிந்து கொள்ள ஒரு சிறிய விருப்பம். நான் கே.ஆர். விஜயாம்மா எனது தாயாராக நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். முதுபெரும் நடிகையான அவரை நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிறது எனது விருப்பம். அது என் தனிப்பட்ட விருப்பம். அதை எல்லோரும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நம்மை விட்டு விலகி இருக்கிற அல்லது ஒதுங்கி இருக்கிற, சில நடிகர்களைக் கண்டுபிடித்து அவர்கள் விரும்பினால், நிச்சயம் அவர்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதில் ஒன்று தான் கே. ஆர். விஜயா என் தாயாராக இருக்க வேண்டும் என்பது. நிறைய படங்களில் கே. ஆர். விஜயாம்மாவோடு இணைந்து நடித்திருக்கிறேன்.

ஆனாலும் அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதைத் தொடர்ந்து அதை நிறைவேற்றித் தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம், சாதி ரீதியாக கலக்குகிற படம் தான். ஆனால் ஜாலியாக மதத்தை, இனத்தைச் சொல்லுகின்ற படமாக இருக்கும். படத்தைப் பார்த்தால் கொஞ்சம் குழப்பமாகி விடும். யாரையும், எந்த மதத்தையும் காயப்படுத்தாமல் இன ரீதியாக, ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதனால் தான், படத்தின் பெயரே ராயர் பரம்பரை என வைத்துள்ளோம். இதில் அந்த ராயரே நான் தான்.

நான் கதாநாயகனாக நடிக்கும்போது நிறைய விஷயங்களைத் தவற விட்டுவிட்டேன். ஆனால் இனி நல்ல மனிதர்களை தவற விட மாட்டோம் என்கிற உறுதியை இங்கு நாம் எடுத்துக்கொள்வோம்” என்றும் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த் ராஜிடம் மாமன்னன் படம் குறித்து கேட்டபோது, 'பல காலங்களில் பல படங்கள் வந்திருக்கிறது. கே. பாலச்சந்தர் காலத்தில் இருந்தே நிறைய படங்கள் பார்த்திருக்கோம்.

நிறைய இயக்குநர்கள் இதைப் படங்களில் வைத்திருக்கிறார்கள். முதல் மரியாதை படத்தில் கூட ஒரு சீன் இருக்கும். இது பல ஆண்டுகளாக இருக்கிற ஒரு விஷயம் தான். அதே மாதிரி, வேதம் புதிது படத்தில் பாலுத் தேவர் என்பது நீங்கள் வைத்தது. பாலுத் தேவர் என்பது பட்டமா என்று கேட்டார்கள். அது யாரையும் காயப்படுத்தாமல் இருந்தது.

நிறைய படங்களில் நிறைய விஷயங்களைச் சொல்லி இருக்கிறார்கள். நிறைய விஷயங்களைத் தாண்டி வந்திருக்கோம். அதை கோபத்தின் காரணமாக சொல்லும்போது பெரியதாக தெரிகிறது. அதைக் குறைத்துச் சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து'' என்றார்.

இது முன்னாள் சபாநாயகர் தனபாலின் கதை என்று சொல்வதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நிச்சயமாக என்னை பொறுத்தவரை தனிப்பட்ட மனிதனாக, எனக்கென்று ஒரு சாதி அடையாளம் இருக்கிறது. ஆனால், இதுவரை அதை வெளியே காட்டாதவன் தான் நான். எந்த இனத்தை நான் சேர்ந்தவன் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு இனம், ஒரு அடையாளம் இருக்கிறது.

நம் தாய்க்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஒவ்வொரு இனத்துக்கும், மதத்துக்கும் கொடுப்போம். அதுபோல தான், தனபால் சபாநாயகராக வரும் போது நான் இருந்தேன். இரண்டு தேர்தலில் அவருக்காக, அவர் தொகுதிக்கே சென்று பிரசாரம் செய்திருக்கிறேன். அந்த மாதிரி நிறைய விஷயங்கள் நடந்திருக்கிறது. ஆனால், இப்போது அவர்கள் கதையாக எடுத்திருக்கிறார்கள்.

ஆனால், அந்த கதையில் எந்த அளவுக்கு ஆழம் இருக்கிறது என்று பார்த்து மரியாதை கொடுத்தேன். இது இப்படிப்பட்ட படம் தான் என்று ஒதுக்கக் கூடாது. அந்த கோபம், வெறுப்பு இருக்க வேண்டாம் என்பது தான் வேண்டுகோள். இப்போது கூட மலம் கலந்த குடிநீர் தொட்டி, அதற்காக எவ்வளவு விசாரணை பண்ணுகிறோம். அப்போது இங்கு, சாதி வன்முறை இருக்கிறது தானே.

என்னைப் பொறுத்தவரை நான் சாதி பார்ப்பது இல்லை. அனைத்து மொழி, அனைத்து மதத்தினரும் ஒன்றாக வேலை செய்யும் துறை என்றால் அது சினிமா தான். இப்போது தான், பான் இந்தியா கொண்டு வந்தார்கள். நானெல்லாம் அப்பவே பான் இந்தியா நடிகராக இருந்திருக்கிறேன். அப்போது நான் ஒரு படத்தில் நடிக்க கையெழுத்து போட்டால் அந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இருக்கும். இது அப்போதே இருந்திருக்கிறது'' எனக் கூறினார்.

சாதி, மதம், மொழி எதுவும் இல்லாத தொழில் சினிமா துறை தான் என நடிகர் ஆனந்த் ராஜ் கூறியதற்கு திரைப்படத்தில் தான் சாதி ரீதியாக கருத்து சொல்லப்படுகிறது என்றும் தனபாலின் கதையும் திரைப்படம் மூலமாக வெளிவந்ததை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, ''ஆம். தனபாலை மேடையில் உட்கார வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள்.‌

அது இந்த ஆட்சியாகட்டும், சில விஷயங்களை விட்டு கொடுக்க முடியாது. இப்போது வரைக்கும் என்னை நண்பராக நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் திருமாவளவனும் ஒருவர். இந்தப் பக்கம் அதிமுகவில் பார்த்தால் உயர்ந்த சாதி என்று சொல்கிற, நானெல்லாம் உயர்ந்த சாதி இல்லை. இப்போது எல்லோரும் பின்தங்கி வந்து கொண்டு இருக்கோம்.

எல்லாரும் எம்.பி.சி கொடுங்க என்று கேட்கிறோம். அப்போது சலுகைகள் அதிகமாக இருக்கும் என்று அர்த்தம். அது அம்பேத்கர் கொடுத்த சட்டம் தான். நாம் கொடுக்கவில்லை. பல நூற்றாண்டு வலி என்பது எனக்குத் தெரியவில்லை.
அரசியல் பிரவேசம் என்பது யார் வேண்டுமானாலும் வரலாம். நான் 2011ல் பிரசாரம் மேற்கொள்ளும் போது, அன்றைக்கு ரஜினிகாந்த் முழு மனதோடு ஆதரவு கொடுத்தார். கமல்ஹாசன், அஜித், விஜய் எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள்.

விஜயகாந்த் அப்போது கூட்டணியில் இருந்தார். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை. அவரது முடிவே முன்பே சொல்லிவிட்டார். இன்றைக்கு விஜய் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அவர் இன்னும் துவங்கவில்லை. அவர் துவங்குவார் என்று நாமாகவே சொல்கிறோம். அவர் கட்சியை ஆரம்பித்தாலும், ஆரம்பிக்கா விட்டாலும் அது அவரது சொந்த விருப்பம்.

வடிவேலு மிகச் சிறந்த நடிகர். அவரை நான் ஆரம்பத்தில் இருந்து பார்க்கிறேன். வடிவேலு நகைச்சுவையில் இருந்து சீரியஸான கதாபாத்திரத்துக்கு மாறி இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் நல்ல பர்ஃபார்மர் மற்றும் நல்ல நடிகர்'' எனவும் கூறினார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் நீக்கம் ரத்து - ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய மனு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.