ETV Bharat / state

பேனர் வைக்கும் திமுகவினர் மீது நடவடிக்கை பாயும் - ஆர்.எஸ். பாரதி எம்.பி - பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்

பேனர் வைக்கும் கலாசாரத்தை அறவே கைவிடுங்கள்; மீறும் கட்சியினர் மீது திமுக தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும் என திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே கைவிடுங்கள்

author img

By

Published : Jul 18, 2021, 5:49 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், இன்னும் கூட ஆங்காங்கே திமுகவினரும் திமுக நிர்வாகிகளும் பேனர்களை வைப்பது தொடர்கிறது.

போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் சென்ற அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாசாரத்தால் மரணங்களும், விபத்துகளும் நிகழ்ந்தன.

'எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம்' என்று முதன் முதலில் உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்ததை அனைவரும் அறிவீர்கள்.

பேனர் நடவடிக்கைகளை திமுக அனுமதிக்காது

அதன்பிறகு, திமுகவினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.

ஆகவே, அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். திமுக தலைவரின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமைக் கழகம் நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'கொங்கு நாட்டின் வருங்கால முதமைச்சரே!' - சர்ச்சையைக் கிளப்பும் பேனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.