ETV Bharat / state

வெளிநாட்டினரையும் கவரும் வகையில் காட்சி படங்கள் வைக்க நடவடிக்கை! - chennai district news

வெளிநாட்டினரையும் கவரும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் சிறப்பாக காட்சி படங்கள் வைக்கப்படும் என அமைச்சர் மா.மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.மதிவேந்தன்
அமைச்சர் மா.மதிவேந்தன்
author img

By

Published : Sep 4, 2021, 8:36 PM IST

சென்னை : சட்டப்பேரவையில் இன்று சுற்றுலா பண்பாடு,அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தையடுத்து அமைச்சர் மா.மதிவேந்தன் பதிலுரை வழங்கினார்.

அதில், "இயற்கையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமாக நம்முடைய சுற்றுலா துறை அமைந்துள்ளது. நாட்டிலேயே சுற்றுலா பயணிகள் வருகையில் முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு. தற்போது உள்ள சுற்றுலா தளங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்துதல் பணிகளை முடித்து சுற்றுலா பயணிகள் வருகையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பொருள்காட்சி, திருவிழாக்களில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கும். அதுமட்டுமல்லாது வெளிநாடுகளில் நம்முடைய துறை சார்ந்த காட்சிப்படங்களை அங்கு ஆவணப்படுத்தி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு வருவதை அதிகரிக்கப்படும். சாகச சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்”என்றார்.

இதையும் படிங்க : கோடநாடு வழக்கு; கோவையில் தனிப்படை காவலர்கள் முகாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.