ETV Bharat / state

நெகமம் சேலைகள் உள்ளிட்ட பாரம்பரிய சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை! - உறையூர் பருத்தி சேலைகள்

நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடி புட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கைத்தறி மற்றும் துணிநூல் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு
author img

By

Published : Sep 6, 2021, 2:22 PM IST

சென்னை: குறிப்பிட்ட ஒரு இடத்தில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் தனித்தன்மையையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் வழங்கப்படுவது தான் புவிசார் குறியீடு.

ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பெறுவதன் மூலம், அந்த பொருளுக்கு சர்வேதேச அங்கீகாரமும், அப்பொருளுக்கான ஏற்றுமதியும் அதிகரிக்கிறது. அப்பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முழுமையான பலன் கிடைக்கின்றது.

இந்தியாவில் 1999ஆம் ஆண்டு புவிசார் குறியீடு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தனித்தன்மை வாய்ந்த பொருள்களை புவிசார் குறியீடு பெற அதன் தனித்தன்மை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்க புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு பதிவு பெற்றதும் அந்தப் பொருள்களின் விற்பனை மேம்படுவதுடன், உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தத்தில் ஒரு அங்கமான அறிவுசார் சொத்துரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் ஊக்குவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில்,நெகமம் சேலைகள், வீரவநல்லூர் செடி புட்டா சேலைகள் மற்றும் உறையூர் பருத்தி சேலைகளை புவிசார் குறியீடு சட்டத்தின் பதிவு செய்ய கைத்தறி துறையால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், பவானி ஜமக்காளம், மதுரை சுங்குடி சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டி, ஆரணி பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள்,திருபுவனம் பட்டு சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜல்கான் வாழைப்பழத்தை அதிகம் ருசிக்கும் துபாய்வாசிகள்: புவிசார் குறியீட்டுக்கு கிடைத்த மவுசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.