ETV Bharat / state

‘வனப்பகுதியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ - வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

வனப்பகுதியை 33 விழுக்காடு விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வனப்பகுதியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை; வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்

author img

By

Published : Oct 10, 2022, 4:51 PM IST

சென்னை: தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில்,’’மொழியை காப்பாற்றும் எண்ணத்துடன் பல்வேறு முயற்சியை தமிழக அரசு எடுத்து வருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக பேச்சு வழக்கில் இருந்து வந்த படுக இன மக்களின் மொழியை பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு தமிழில் மொழி பெயர்த்து 14 ஆயிரம் வார்த்தைகள் அடங்கிய அகராதியை முதலமைச்சர் வெளியிட்டார்.

இது அப்பகுதியில் பயிலும் இளைஞர்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் என்றார். படுக மொழியில் உள்ள சுமார் 1லட்சத்து 50ஆயிரம் வார்த்தைகளில் 14ஆயிரம் சொற்களை மொழி பெயர்த்துள்ளோம் என தெரிவித்தார்.

மேலும், மனிதர்கள் எண்ணிக்கை அதிகமான காரணத்தினால், வனப்பகுதியில் இருந்து விலங்குகள் மனிதர்கள் இருப்பிடம் நோக்கி நகர தொடங்கியுள்ளன. அதனால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக வனப்பகுதியில் கால்வாய், தொங்கு வேலி, சோலார் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது என்றார்.

மேலும் வனப்பகுதியை 33% விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய கூலி வேலை செய்வதற்கு தற்போது ஆட்கள் முன்வருவதற்கு தயக்கம் காட்டி வருவதோடு, பற்றாக்குறையும் நிலவுகிறது.

இந்நிலையில் 10 ஆயிரம் சதுர ஏக்கர் தேயிலை தோட்டத்தில், 5,000 சதுர ஏக்கரில் 1,000 பேரை தேயிலை தோட்ட வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கை அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 5,000 சதுர ஏக்கர் பரப்பளவில் காடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விக்கி - நயன் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றவிவகாரம்; 'விளக்கம் கேட்கப்படும்...!' - அமைச்சர் மா.சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.