ETV Bharat / state

மனிதனின் மண்டை ஓட்டை 3டி முறையில் டைட்டானியத்தில் செய்து பொருத்திய அரசு மருத்துவமனை - கதிரியக்கவியல்துறை பேராசிரியர் தேவி மீனல்

3D-ல் டைட்டானியத்தைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்த மண்டை ஓட்டின் இடைவெளியை நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் அடைத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 24, 2023, 9:33 PM IST

மனிதனின் மண்டை ஓட்டை 3டி முறையில் டைட்டானியத்தில் செய்து பொருத்திய அரசு மருத்துவமனை

சென்னை: மனிதனின் மண்டை ஓட்டில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவற்றில் ஏற்படும் இடைவெளியை, 3D முறையிலான டைட்டானியத்தாலான பாகத்தைக் கொண்டு மனித மூளைக்குப் பாதுகாப்பாக பொருத்தி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் துறை மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

இவ்வாறு டைட்டானியம் மண்டை ஓட்டைப் பொருத்துவதால் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதிலும் எந்தவிதமான பிரச்னையும் இருக்காது எனவும், பக்க விளைவுகள் எதுவும் இதனால் வராது எனவும் கூறிய மருத்துவர்கள், ஏற்கனவே மண்டை ஓட்டில் ஆப்ரேஷன் செய்து எலும்பு சிமென்ட், டைட்டானியம் மெஷ் பயன்படுத்தி மூடியுள்ளவர்களுக்கும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து 3 பிரின்டர் மூலம் செய்யப்பட்ட நவீன டைட்டானியம் மண்டை ஓட்டைப் பொருத்த முடியும் எனத் தெரிவித்தனர்.

மனிதனின் முக்கியமான பகுதி தலையாகும். மனிதனின் செயல்பாடுகளை நிர்ணயம் செய்வது மூளை. மூளையை மண்டை ஓடு பாதுகாத்து வருகிறது. மூளையில் ஏற்படும் பாதிப்புகளை மண்டை ஓட்டை அகற்றிய பின்னர் தான் சரி செய்ய வேண்டியது உள்ளது. ஆனால், அதன் பின்னர், பழைய நிலையில் அந்தப் பகுதி காட்சி அளிக்காது. அதனை நவீன 3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் துறை மருத்துவர்கள் மீண்டும் பழைய நிலையை வர வைத்து சாதனைப் புரிந்துள்ளனர்.

இது குறித்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் நாராயணசாமி கூறும்போது, ''மனிதனின் தலையில் உள்ள முக்கியப் பகுதி மூளையாகும். இந்தப் பகுதி விபத்தினால் பாதிக்கப்படும் போது மனிதனின் மண்டை ஓட்டை அகற்றி மூளைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதுள்ளது. அதன் பின்னர் மண்டை ஓட்டை எலும்பு சிமென்ட், டைட்டானியம் மெஷ் போன்றவற்றின் மூலம் அடைப்பார்கள். ஆனாலும் பழைய நிலையில் உருவம் இருக்காது. இதனால் அவர்கள் வெளியில் செல்லும் போதும் மண்டைப்பகுதியை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்தப் பகுதியில் குழிபோல் தெரிவதால் வெளியில் செல்லும்போது தலையில் தொப்பி அணிந்து செல்ல வேண்டியது இருக்கிறது.

இதுபோன்ற நிலையில் இருந்து மாற்றம் வரும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறைத் தலைவர் கோடீஸ்வரன் தலைமையிலான மருத்துவக்குழுவில் இடம்பெற்ற மயக்கமருந்து நிபுணர் சந்திரசேகரன், கதிரியக்கவியல் துறை பேராசிரியர் தேவி மீனல் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் 3D தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டைட்டானியம் மண்டை ஓட்டை 3 பேருக்கு நியூரோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து சாதனைப் படைத்துள்ளனர்.

நரம்பியல் அறுவை சிகிச்சை குழுவினர், கதிரியக்கவியல் துறையில் பாதிக்கப்பட்டவரின் மண்டை ஓட்டை எக்ஸ்ரே எடுத்து 3D பிரிண்டரை பயன்படுத்தி அதேபோல் வடிவமைத்தனர். அதன் பின்னர் மருத்துவக்குழுவினர் மூளைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட பகுதி சீர் செய்யப்பட்டது. அதன் பின்னர், 3D பிரிண்ட் பயன்படுத்தி தயார் செய்யப்பட்ட டைட்டானியம் மண்டை ஓடு பொருத்தப்பட்டது. இதனால், மண்டைப் பகுதி ஏற்கனவே இருந்தது போல் அழகாக இருக்கும். மண்டைப் பகுதியில் உடலில் இருந்து வரும் அழுத்தத்தை விட வெளியில் இருந்து வரும் அழுத்தத்தாலும் பாதிப்பு ஏற்படாது.

தலையில் ஏதாவது அடிபட்டாலும் மூளையில் பாதிப்பு ஏற்படாது. ஏற்கனவே, அறுவை சிகிச்சை செய்த பின்னர் மூளையில் எலும்பு சிமென்ட், டைட்டானியம் மெஷ் பயன்படுத்தி செய்தபோது அந்தப் பகுதியல் அடிபட்டால் மூளையில் பாதிப்பு ஏற்படும். புதிய முறையில் டைட்டானியம் பயன்படுத்தி செய்யப்பட்ட மண்டை ஓட்டை பொருத்தும்போது மிகவும் பாதுகாப்புடன் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறை தலைவர் கோடீஸ்வரன் கூறும்போது, ’’நவீன முறையில் டைட்டானியம் மண்டை ஓட்டை செய்து பொருத்தும் போது வழக்கம் போல் அவரின் தலைப் பகுதி இருக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அதற்கான எந்தவிதமான அடையாளமும் தெரியாது. ஏற்கனவே மண்டைப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கும் மாற்றி நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யலாம். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதிலும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.
தனியார் மருத்துவமனையில் செய்யப்படுகிறது. முதல்முறையாக அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Chennai airport: கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு.. விமானியின் செயலால் உயிர் தப்பிய 336 பேர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.