ETV Bharat / state

அண்ணா பல்கலை: அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியீடு

anna universityகல்லூரிகள் பட்டியல் வெளியீடு

author img

By

Published : Jul 28, 2020, 6:16 PM IST

Updated : Jul 28, 2020, 7:56 PM IST

18:10 July 28

சென்னை: அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஐந்து மண்டலங்களிலும் உள்ள ஒவ்வொரு கல்லூரியின் பெயர், அனுமதிக்கப்பட்ட இடங்கள், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குறியீட்டு எண் ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2019-20ஆம் கல்வி ஆண்டில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விபரத்தையும் வெளியிட்டுள்ளனர்.

மாணவர்களும் பெற்றோர்களும் 2020-21 கல்வி ஆண்டில் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விபரத்தினை http://www.annauniv.edu/cai/options.php என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சில கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்து அனுமதியும் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெறுவதற்கு சில ஆவணங்களை அளிக்க வேண்டி இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் விதி முறைகளின்படி முழுமையான ஆவணங்களை கொடுக்க வேண்டும். தொழில்நுட்ப கல்வி கழகத்தின் விதிமுறைகளின்படி ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ஆவணங்களை அளித்தால் அங்கீகாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: களங்கம் ஏற்படுத்துவேர் மீது நடவடிக்கை - எச்சரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்

Last Updated : Jul 28, 2020, 7:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.