ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் இரு கார்கள் மோதிக்கொண்ட காட்சி!

சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் இரண்டு கார்கள் மோதிக் கொண்ட சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Two cars collided and crashed at the Chennai airport multilevel car parking
மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் மோதிக் கொண்ட கார்கள்
author img

By

Published : Jun 7, 2023, 4:43 PM IST

மல்டிலெவல் கார் பார்க்கிங்கில் மோதிக் கொண்ட கார்கள்

சென்னை: விமான நிலையத்திற்கு வரும் பயணிகளில் வசதிக்காக சென்னை விமானநிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 2,100 கார்கள் வரை நிறுத்த முடியும். இந்த அடுக்குமாடி கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் முடிந்து சமீபத்தில் தான் பயன்பாட்டிற்கு வந்தது.

அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பார்க்கிங் பகுதியில். மின்சார வாகனங்களும் நிறுத்தலாம். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும், கார் பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்து. பெரும்பாலும் இந்த கார் பார்க்கிங்கில் வெளி நாடுகள் மற்றும் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பார்க்கிங் பகுதியில் கார்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் அடுக்குமாடி கார் பார்க்கிங்கின் நான்காவது தளத்தில் இருந்து தரை தளத்திற்கு இறங்கிய காரும் தரை தளத்தில் இருந்து மேல் தளத்திற்கு சென்ற காரும் மோதி கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் அதிஷ்ட வசமாக ஓட்டுனர் தவிர வாகனத்தில் பயணிகள் இல்லாததால் இழப்புகள் ஏற்படவில்லை. இந்த விபத்தில் மோதிய வேகத்தில் நான்காவது தளத்தில் பக்கவாட்டு சுவரில் மோதி கார் நின்றது.

முறையான தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் இந்த மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதியில் நான்காவது தளத்தில் இருந்து கீழே குதித்து சமீபத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அரங்கேறியது. தற்போது கார் பார்க்கிங்கின் நான்காவது தளத்தில் இருந்து கீழே இறங்கும் காரும் மேல் செல்லும் காரும் அதிவேகத்தில் மோதி விபத்து உள்ளாகியுள்ளது.

இது குறித்து வாகன ஓட்டுனர்களிடம் கேட்ட போது முறையான எச்சரிக்கை பலகைகள் இல்லை. எதிரில் வரும் வாகனங்கள் திரும்பும் பகுதியில் தெரியவில்லை எனவும் வாகனங்கள் மேலே செல்லவும், இறங்கவும் ஒரே வழியை பயன்படுத்தப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் தெரிவித்தனர்.

வாகன ஓட்டுனர்கள் இது குறித்து பலமுறை கார் பார்க்கிங் பாதுகாப்பு அதிகாரியான பார்தீபனிடம் தெரிவித்தும் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் சீட் முன்பதிவு அதிகரிப்பு.. அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.