ETV Bharat / state

ஒருவழியாக களமிறங்கும் ஏசி பேருந்துகள்! - முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதும் நாளை(அக்.1) முதல் கட்டுப்பாடுகளுடன் குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

AC buses
ஏசி பேருந்துகள்
author img

By

Published : Sep 30, 2021, 11:26 AM IST

Updated : Sep 30, 2021, 11:41 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் சேவை நிறுத்தப்பட்டன. கரோனா தொற்றுப் படிப்படியாக குறையத் தொடங்கியதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு அரசு பேருந்துகள் கடந்த ஜூன் மாதம் முதல் இயங்கப்பட்டன. எனினும் குளிர்சாதன பேருந்துகள் இயங்கப்படவில்லை.

இதனால் பாதிப்புக்குள்ளான பயணிகள், குளிர்சாதன பேருந்துகளை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் அரசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து குளிர்சாதன பேருந்துகள் தூய்மைப்படுத்தி, பழுதுபார்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதேசமயம் ஏ.சி பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முகக்கவசம் அணிந்து, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அக்.1 முதல் பாண்டியன் பல்லவன் வைகை ரயில்களின் நேரம் மாற்றம்

Last Updated : Sep 30, 2021, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.