செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் நாராயண மூர்த்தி (36). இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் கேபிள்டிவி நிறுவனத்தில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார்.
இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஹர்ஷினி, தர்ஷினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று வேலைக்கு சென்று நாராயணமூர்த்தி வீடு திரும்பவில்லை. இதற்கிடையில், கூடுவாஞ்சேரி பொத்தேரி இரயில் நிலையத்திற்கு இடையில் ரயில்வே தண்டவாளத்தில் வெட்டுக் காயங்களுன் சடலமாக கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்படி கூடுவாஞ்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு சடலமாக கிடப்பது நாராயண மூர்த்தி என்று தெரியவந்தது. விசாரணையில் ’’ அடையாளம் தெரியாத நபர்கள் திட்டமிட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்து தண்டவாளத்தில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து, காவலர்கள் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? என்று பல்வேறு கோணத்தில் கூடுவாஞ்சேரி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: உற்சாகமும் நம்பிக்கையுமாக கடமையாற்றுங்கள்... நாளை நமதே! - டிடிவி தினகரன்