கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கினை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யப்படும் கடைகள் தவிர மற்ற அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், மாநில, மாவட்ட எல்லைகளுக்கிடையேயான போக்குவரத்தும் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து ஆவின் பால் நேரடி விற்பனை நிலையங்களிலும் பால் காலை முதல் இரவுவரை தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், மக்கள் கூட்டம் கூட்டமாகக் கடைகளுக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதைப் பயன்படுத்தி சிலர் அதிக விலைக்குப் பால் விற்பனை செய்வதாக எழுந்த புகாரையடுத்து, காலை 3.30 மணி முதல் காலை 9 மணிவரை பால் முகவர்களின் கடைகளில் மட்டுமே பால் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'பாலை அதிக விலைக்கு விற்பவர்கள் பிணத்தை வைத்து வியாபாரம் செய்வதற்குச் சமம்'