சென்னை: தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம், நான்கு விதமான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. அதோடு, பாலின் மதிப்புக்கூட்டுப் பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், கோவா மற்றும் இனிப்புகளையும் விற்பனை செய்து வருகிறது.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் 116 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்தது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் புதிய முயற்சியாக கேக் தயாரிப்பில் இறங்க உள்ளது.
முதற்கட்டமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், வெண்ணிலா, சாக்லெட் வகை கேக்குகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மாதமே கேக்கை அறிமுகம் செய்து, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை இலக்காக வைத்து, விற்பனையில் இறங்க உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தீபாவளி பண்டிக்கைக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை : ஆவின் அறிவிப்பு