ETV Bharat / state

ஆருத்ரா கோல்டு இயக்குநர் செந்தில்குமாரை 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார்! - rk suresh

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி வழக்கில் தொடர்புடைய இயக்குநரை கடத்தப்பட்ட கும்பலிடம் இருந்து 6 மணி நேரத்தில் மீட்டெடுத்த கோயம்பேடு தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

aarudhra gold
ஆருத்ரா கோல்டு இயக்குநர் செந்தில்குமாரை 6 மணி நேரத்தில் கண்டுபிடித்த தனிப்படை போலீசார்
author img

By

Published : Jul 31, 2023, 2:15 PM IST

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி ரூபாய் 2,438 கோடி மோசடி செய்த வழக்கில் இயக்குனர்கள் உட்பட 21 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிறுவனத்தின் இயக்குனரில் ஒருவரான அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(37) என்பவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த செந்தில்குமார், தினமும் காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் செந்தில்குமார் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு கோயம்பேடு சேமாத்தம்மன் செக்டர் தெருவில் அமைந்துள்ள அவரது உறவினர் முருகன் என்பவரை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று செந்தில்குமாரை தாக்கி கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதனைக் கண்ட உறவினர் முருகன் உடனடியாக செந்தில்குமாரின் மனைவி சரண்யாவிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர் செந்தில்குமாரின் செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது, அதில் பேசிய நபர்கள் தங்களது இழப்பீடு தொகையாக 15 லட்ச ரூபாய் தர வேண்டும் என மிரட்டி உள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் மனைவி தனது நகையை விற்று 1 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார். உடனடியாக அந்த கும்பல் மீனாட்சி மருத்துவமனை அருகே பணத்தை கொண்டு வருமாறு சொல்லியிருக்கின்றனர். அதன்படி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் செந்தில்குமாரின் தாயார் கலா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செந்தில்குமாரின் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

குறிப்பாக, சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த காரின் பதிவு எண்ணை வைத்து காரின் உரிமையாளரான அஜித் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், விசாரிக்கையில் அவர் கூறிய தகவலின் படி காரின் எண்ணை வைத்து அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டப்பவர்கள் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வம்(38), பாலாஜி(27), சரவணன்(27), விக்னேஷ், மணிகண்டன், சிவா ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், முதற்கட்ட விசாரணையில், செந்தில்குமாரை நம்பி ஆருத்ரா நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்து ஏமாந்து உள்ளதாகவும், மோசடி செய்த செந்தில்குமாரை கடத்தி பணம் கேட்டால் கிடைக்கும் என்பதற்காக கடத்தியதாகவும், கடத்தப்பட்ட செந்தில்குமாரை போரூர் டோல் பிளாசா அருகில் இறக்கி விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து செந்தில்குமாரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது செந்தில்குமார் திண்டுக்கல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் கோயம்பேடு போலீசார் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த கோயம்பேடு தனிப்படை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஒரே மாதிரியான ஆடை அணிந்து ஆடி அசத்திய வள்ளி கும்மி நடனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.