ETV Bharat / state

ஹிப்ஹாப் ஆதி இசையில் வைபவ் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆலம்பனா’ திரைப்படம்: டிசம்பர் 15 அன்று ரிலீஸ்! - Actor vaibhav

Aalambana Movie Promotion: ஹிப்ஹாப் ஆதியின் இசையமைப்பில் நடிகர் வைபவ், நடிகை பார்வதி நாயர், திண்டுக்கல் லியோனி, முனீஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

டிசம்பர் 15 அன்று ரிலீஸ்
ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பில் உருவாகியுள்ள ஆலம்பனா திரைப்படம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 4:39 PM IST

சென்னை: நடிகர் வைபவ் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது, பல திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் பாரி கே.விஜய் எனும் அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆலம்பனா' எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஹிப்ஹாப் ஆதியின் இசையமைப்பில் 'ஃபேண்டஸி' காமெடியாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகை பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், திண்டுக்கல் லியோனி, முனீஷ்காந்த், காளி வெங்கட், கபீர் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று (டிச.10) நடைபெற்றது. இதில் பேசிய திண்டுக்கல் லியோனி படத்தில் நிறைய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளதாகவும் குழந்தைகளோடு பார்க்கக்கூடிய அருமையான படம் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: 10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்றாங்க… வருத்தப்பட்ட நயன்தாரா!

இதனை தொடர்ந்து பேசிய நடிகர் காளி வெங்கட் முண்டாசுபட்டி படத்தின் போதே அப்படத்தின் உதவி இயக்குநர் பாரியுடன் பணிபுரிந்ததாகவும் தற்போது அவர் இயக்கியுள்ள இந்த படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சி அழிப்பதாகவும் தெரிவித்தார். இந்தப்படம் மனம் விட்டு சிரித்து மகிழும் படமாகவும் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும் என நடிகர் முனீஷ்காந்த் கூறினார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் நான் நினைத்ததை விட, கேட்டதை விட அதிகம் செலவழித்ததாகவும், அவரால் தான் இத்திரைப்படம் நன்றாக வந்துள்ளது என இப்படத்தின் இயக்குனர் பாரி கூறினார். படம் குறித்து நடிகை பார்வதி நாயர் கூறுகையில், இந்தப்படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ் என மிக நல்ல மனிதர்களோடு வேலை பார்த்தது சந்தோஷமாக இருந்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, நடிகர் வைபவ் பேசுகையில், எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டு, இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இப்படம் தனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும் எனவும் கூறினார்.

இதையும் படிங்க: பட்ஜெட் முக்கியமல்ல நல்ல கதை தான் மக்களிடம் வரவேற்பை பெறுகிறது: நடிகர் ஹரிஷ் கல்யாண் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.