ETV Bharat / state

மீன் குழம்பால் வந்த வினை - உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் - Husband commits suicide

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த ஆத்திரத்தில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன் குழம்பால் வந்த வினை
மீன் குழம்பால் வந்த வினை
author img

By

Published : Aug 3, 2021, 9:12 PM IST

சென்னை: கொரட்டுர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார், பெயிண்டர். இவருடைய மனைவி துர்கா, வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மோகன், ஜீவா என்ற மகன்கள் உள்ளனர்.

குமார் தனது வேலையை முடித்துக்கொண்டு நேற்று (ஆக.2) இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, குமாருக்கு மனைவி துர்கா மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார். அதற்கு குமார் தனது மனைவியிடம் இன்று ஆடி கிருத்திகை நாளான்று ஏன் மீன் குழம்பு வைத்தாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வீடு திரும்பியவர்களுக்கு அதிர்ச்சி

இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்ததை தொடர்ந்து மகன்கள் இருவரும் அருகில் உள்ள துர்காவின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் இரவு 10 மணி அளவில் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும், தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

கணவன் தற்கொலை

உயிரிழந்த பெயிண்டர் குமார்
உயிரிழந்த பெயிண்டர் குமார்

சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குமார் உடலை மீட்டு உடற்கூராவிற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காவல்துறை விசாரணை

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் துர்காவிடம் நடத்திய விசாரணையில், ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும் கூறப்படுகிறது.

மயக்கமடைந்து கீழே விழுந்த துர்கா இறந்துவிட்டதாக நினைத்து பயந்து போன குமார், தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கொரட்டூர் காவல்துறையினர் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பழனி மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.