ETV Bharat / state

நீட் தேர்வு மோசடி: 'போலீசார் வெளியிட்ட புகைப்படங்கள் குறித்த தகவல்களை கண்டுபிடிக்கமுடியவில்லை' - நீட் தேர்வு புகைப்படம்

நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி காவல்துறை வெளியிட்ட புகைப்படங்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

aadhar answer on neet exam forgery
நீட் தேர்வு மோசடி: 'போலீசார் வெளியிட்ட புகைப்படங்கள் குறித்த தகவல்களை கண்டுபடிக்கமுடியவில்லை'
author img

By

Published : Oct 18, 2020, 7:29 PM IST

சென்னை: நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் மோசடி செய்து, மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 15 பேருக்கும் மேல் கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவர்கள் 10 பேரின் புகைப்படத்தை சிபிசிஐடி காவல் துறையினர் வெளியிட்டனர். மேலும், அவர்களது புகைப்படத்தை வைத்து, அவர்களது விவரங்களை கொடுக்குமாறு பெங்களூருவில் உள்ள ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி காவல்துறையினர் கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்குப் பதில் எழுதியுள்ள ஆதார் ஆணையம், சிபிசிஐடி அளித்த புகைப்படத்தை வைத்து அவர்களது தகவலை தரவுகளின் மூலம் கண்டுபிடிக்கமுடியவில்லை எனக் கூறியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ரஷீத்தை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு மோசடி செய்த மாணவர் சூர்யா மனு தொடர்பில் சிபிசிஐடி பதில் சொல்ல நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.