ETV Bharat / state

தனியார் மருத்துவமனையில் பூனைகள் கொலையா? - பதைபதைக்கும் வீடியோ!

சென்னை தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் பூனைகளை பிடித்து கொன்று விட்டதாக விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

author img

By

Published : Nov 24, 2022, 5:22 PM IST

Updated : Nov 24, 2022, 7:34 PM IST

மருத்துவமனையில் பூனைகளை பிடித்து கொலை: வீடியோ வைரல்

சென்னை: தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் (hindu mission hospital) ஏராளமான பூனைகள் சுற்றி வந்துள்ளன. இதில் சிகிச்சை நோயாளிகளை சில பூனைகள் கடித்தாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம், ஊழியர்கள் மூலம் பூனைகளை பிடித்துள்ளனர். அப்போது பூனைகளை கொடுமை படுத்தி பிடித்த வீடியோ மற்றும் இறந்த நிலையில் மருத்துவமனை முன்பு கிடந்த வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வரைலானது.

இந்த நிலையில் மருத்துவமனையில் பூனைகள் பிடித்து கொல்லப்பட்டதாகவும், கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் விலங்கின ஆர்வலர்கள் வீடியோ ஆதாரத்துடன் தாம்பரம் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பூனைகளை பிடிப்பதற்கு என்ன காரணமாக இருந்தாலும், இது போன்ற செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது எனவும் ஆவேசமாக கூறினர்.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், "நோயாளிகளுக்கு தொல்லை கொடுத்த பூனைகள் பிடிக்கப்பட்டதே தவிற பூனைகள் கொல்லப்படவில்லை" என தெரிவித்தனர். ஆனாலும், இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஆலைக்கு வந்து சாக்லேட் சாப்பிட்ட கரடி - பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை!

Last Updated : Nov 24, 2022, 7:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.