ETV Bharat / state

'Trans Kitchen' மூலம் சென்னையை கலக்கும் திருநங்கைகள்!

சென்னை கொளத்தூரில் முதன்முறையாக திருநங்கைகளால் "Trans Kitchen" என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு!

சென்னையில் முதல் "Trans Kitchen".!
சென்னையில் முதல் "Trans Kitchen".!
author img

By

Published : Jan 21, 2023, 1:24 PM IST

சென்னையில் முதல் "Trans Kitchen".!

சென்னை: இன்றைய நவீனக் காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு சாதனைகளைச் செய்து வருகின்றனர். அதே போல் சமூகத்தில் ஒரு சிலரால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளும் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை உந்த உலகிற்கு உணர்த்தி வருவதை நாம் அன்றாட செய்திகள் மூலம் அறிந்து வருகிறோம்.

அவர்களின் வளர்ச்சியைப் போற்றும் வகையில் அரசும் கல்வி, வேலைவாய்ப்புகள், தொழில் கடன் ஆகிய உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தொழிலாளர்கள் மட்டும் இல்லாமல் தங்களால் முதலாளியாக மாற முடியும் என்று நம்பிக்கையில் தனியார் தொண்டு நிறுவனத்தின் (United way Chennai) துணையுடன், கொளத்தூர் பகுதியில் தொடங்கப்பட்டது தான் "Trans Kitchen என்ற உணவகம். இந்த உணவகம் கடந்த 18ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த உணவகத்தில் காலை சிற்றுண்டி, மதியம் பிரியாணி, சாப்பாடு மற்றும் இரவு சிற்றுண்டி விற்கப்பட்டு வருகிறது, அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் அவர்கள் இட்லி மீன் குழம்பு சிறப்பு உணவாக (signature dish) இருக்கிறது. 5 திருநங்கைகளும் 5 திருநம்பி என மொத்தம் 10 நபர்கள் இந்த உணவகத்தில் பணிபுரிகின்றனர்.

உணவுத்துறையில் ஆர்வம் இருக்கும் திருநங்கைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி 3 மாதங்கள் வழங்கி அதற்குப் பிறகு இந்த உணவகத்தில் சேர்த்துக் கொள்கின்றனர். இதற்காகச் சிறப்புப் பயிற்சிப் பட்டறை சைதாப்பேட்டையில் இயக்கப்பட்டு வருகிறது.

உணவகம் தொடர்பாக நம்மிடம் பேசிய உணவகத்தின் உரிமையாளர் திருநங்கை ஜீவா, “மக்களின் கண்ணோட்டம் திருநங்கை என்றால் யாசிப்பதற்கும், பாலியல் தொழில் செய்வதற்கும் என்று நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் முதலில் கோவை மற்றும் மதுரையில் 'ட்ரான்ஸ் கிச்சன்' தொடங்கப்பட்டது.

தற்போது முதல் முறையாகச் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பணி புரியும் திருநங்கை திருநம்பிகள் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களுடன் உறவு முறை நன்றாக இருக்க, இதுபோன்று உணவகத்தைத் திறந்து இருக்கிறோம். அது மட்டும் இல்லாமல், திருநங்கைகள் பல துறைகளில் ஏற்கனவே சாதித்துக் காட்டியுள்ளனர் உணவுத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இது தொடங்கப்பட்டுள்ளது.

உணவுத்துறையில் ஆர்வம் உள்ள திருநங்கைகள் 60 நபர்களைத் தேர்வு செய்து அதில் சிறப்பாக செயல்படும் 20 நபர்களை மீண்டும் தேர்வு செய்து, பத்து நபர்களை இறுதியாக பணிக்குத் தேர்வு செய்வோம் அவர்களுக்கு மூன்று மாதம் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்ட பிறகு உணவகத்தில் பணி வணங்குவோம். இது மட்டும் இன்றி திருநங்கைகளுக்கு அவர்கள் ஆர்வமுள்ள துறைகளில் பயிற்சி வழங்க இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து நம்மிடம் பேசிய உணவகத்தில் பணிபுரியும் திருநங்கை தாமரைச்செல்வி, “முதலில் நான் கடை கடையாகச் சென்று தான் பணம் வசூலித்து வந்தேன். திருநங்கைகளுக்கென சிறப்பு தங்கும் இடத்திலிருந்தேன். அங்கு உணவு செய்யும் பணியைச் செய்து கொண்டிருந்தேன். அதற்குப் பிறகு இந்த உணவகம் மூலம் எனக்கு வாய்ப்பு கிடைத்து. தற்போது இந்த உணவகத்தில் நான்தான் உணவு செய்து வருகிறேன்.

போதுமான வருமானம் இதில் வருகிறது. கடை கடையாகச் சென்று பணம் வசூலித்த பொழுது ஆடம்பரமாக வாழ்ந்தோம். தற்போது ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு கௌரவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடை கடையாகச் சென்ற பொழுது நேரில் பார்க்கும் பொழுது நன்றாகப் பேசிவிட்டுச் சென்றவுடன் ஒரு விதமாகப் பேசுவார்கள். தற்போது இந்த உணவகம் வைத்ததால் நன்றாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் இதே போல் உழைத்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சமூகத்தில் நற்பெயர் உண்டாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்” என தெரிவித்தார்.

இந்த உணவகம் தொடங்கப்பட்டதிலிருந்து அனைவரும் பாராட்டி வருகின்றனர் பொதுமக்கள் இவர்களுக்கு உறுதியாக இருக்க வேண்டும் என்பது இவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: தெப்பக்குளத்து கதவை கழற்றி மாட்ட ரூ.70 ஆயிரம் டெண்டரா!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.