ETV Bharat / state

சென்னையிலிருந்து சிங்கபூருக்கு இயக்கப்பட்ட விமானம்! - சென்னையில் மீண்டும் இயக்கப்பட்ட விமானம்

சென்னை: சுற்றுலா விசா மூலம் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டவர்களை திருப்பி அனுப்ப சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம் இன்று இயக்கப்பட்டது.

A special flight from Chennai to Singapore was launched today

author img

By

Published : Apr 11, 2020, 5:40 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து பொது போக்குவரத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. மேலும், வெளிநாட்டு விமானங்கள் இந்தியாவிற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால், இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் பலரும் தங்களது நாட்டிற்கு திரும்ப முடியாமல் அவதியுற்றுவந்தனர்.

இந்தநிலையில், சென்னையில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாடுகளைச் சேர்ந்த தூதரகங்கள் மூலம் சுற்றுலா வந்த பயணிகளை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையிலிருந்து சிங்கபூருக்கு இயக்கப்பட்ட விமானம்

இதையடுத்து, தமிழ்நாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டு பயணிகள் சிறப்பு விமானங்கள் முலம் அவர்களது நாடுகளுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு அனுமதியளித்த நிலையில், சென்னை பன்னாட்டு முனையத்திலிருந்து 209 பயணிகளுடன் சிங்கப்பூருக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே நாளில் 5 சிறப்பு தனி விமானங்களில் சென்ற வெளிநாட்டவர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.