சென்னை: தமிழ்நாடு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தவர் பிரஜ் கிஷோர் ரவி. இவர் நேற்று முன்தினம் விருப்ப ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்த தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியானவர் பி.கே.ரவி. இவர் தமிழ்நாடு மாநில டிஜிபிகான போட்டியில் இடம் பெற்றிருந்தார். முதல் இடத்தில் சஞ்சய் ஆரோராவும், இரண்டாம் இடத்தில் பி.கே. ரவியும் இடம் பிடித்திருந்தனர்.
இந்த நிலையில் பி.கே.ரவிக்கு மின்சார வாரிய லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக பதவி ஒதுக்கப்பட்டது. கடந்த ஆண்டு தீயணைப்பு துறை டிஜிபியாக பி.கே.ரவி பணியாற்றிபோது தமிழக அரசு இவரை காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் பி.கே.ரவியின் பதவிக்காலம் மூன்று மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில் விருப்ப ஓய்வு பெறுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இவர் தமிழகத்தில், விருதுநகர், பரமக்குடி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காவல்துறையில் முக்கிய பதவியில் பணியாற்றி உள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிச் சந்திப்பு பதக்கத்தை இரண்டு முறை வென்றுள்ளார். மத்திய தொழில் பாதுகாப்புப் படையிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிலும் பணியாற்றினார்.
ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற பி.கே,ரவி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் சொந்த ஊர் பீகார் மாநிலத்தில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஏற்கனவே ஓய்வு பெற்ற டிஜிபி கருணாசாகர் பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இதேபோல் பல ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணி ஓய்வு காலத்தில் அல்லது விருப்ப ஒய்வு பெற்று அரசியலில் செய்லபட்டு வருகிறார்கள்.
தமிழ்நாட்டின் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள சசிகாந்த் செந்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அதேபோல் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசியல் கட்சி ஒன்றை 2020 ஆம் ஆண்டு தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : CM MK Stalin : தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதே திராவிட மாடலின் திட்டம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!