ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் - மாநில திட்டக்குழு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம்

author img

By

Published : Oct 27, 2022, 8:50 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாடு மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (27.10.2022) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின் மீதான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநிலத் திட்டக் குழு புதிய கொள்கைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலுக்கிணங்க வடிவமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. மாநிலத் திட்டக் குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய பத்து கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அவற்றில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள மூன்று கொள்கைகள்

(1) ஆறு துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை - மின் வாகனம், தொழில்கள் 4.0, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா

(2) தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை

(3) திருநர் + நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இக்கொள்கைகளைச் செயல்படுத்துதல் மற்றும் முக்கிய முன்னெடுப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாநிலத் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், ஆகியோர் இக்கொள்கைகள் குறித்து விளக்கினர். அதனைத் தொடர்ந்து, தொழில் மயமாதல் கொள்கை குறித்து மல்லிகா சீனிவாசன், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து அமலோற்பவநாதன், திருநர் + நலக்கொள்கை குறித்து முனைவர் நர்த்தகி நட்ராஜ் ஆகியோர் விவரித்தனர்.

இக்கூட்டத்தில், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, குழு உறுப்பினர்கள் பேராசிரியர் இராம. சீனுவாசன், பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து (ஓய்வு), சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, திருமதி மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'உண்மையில் ஸ்டாலின் திரைக்கதை எழுத, உதயநிதி வாரிசு படத்தில் நடிக்க வேண்டும்' - செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.