ETV Bharat / state

மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நியமனத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு! - Challenge HRC chairman Bhaskaran appointment

தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்த உத்தரவுக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Challenge HRC chairman Bhaskaran appointment, petition filed before MHC

author img

By

Published : Feb 20, 2021, 7:54 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவி, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் முதல் காலியாகவுள்ள. இப்பதவிக்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்து, கடந்தாண்டு(2020) டிசம்பர் 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தலைவரைத் தேர்வு செய்த பின் தேர்வுக் குழுவை கூட்டியதாகக் கூறி, எதிர்க்கட்சி தலைவர், தேர்வுக் குழு கூட்டத்தை புறக்கணித்துள்ளதாகவும், இந்த நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, நீதிபதி பாஸ்கரன் நியமனம் தொடர்பான பரிந்துரையை திருப்பி அனுப்பும்படி, மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விடுத்த கோரிக்கையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பத்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்ட நீதிபதி பாஸ்கரனை நியமித்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால், அவரது நியமனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், நியமன உத்தரவை செல்லாது என அறிவித்து, தகுதியானவரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வழக்கின் விசாரணையை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.