ETV Bharat / state

தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அரிய வகை விலங்குகள் கடத்திய ஒருவர் கைது! - Update smuggled news in tamil

Thailand animal seized: தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்குக் கடத்திவரப்பட்ட அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகள், ஆப்பிரிக்கக் கண்டத்து எலிகள் என 31 அரிய வகை விலங்குகள், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, தஞ்சாவூரைச் சேர்ந்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.

a-person-who-smuggled-rare-species-of-animals-from-thailand-to-chennai-by-plane
தாய்லாந்திலிருந்து விமானத்தில் சென்னைக்கு அரிய வகை விலங்குகள் கடத்தல் - ஒருவர் கைது!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 11:08 PM IST

சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து, விமானத்தில் சென்னைக்குக் கடத்திக் கொண்டு வரப்பட்ட, அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள், ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகள், ஆப்பிரிக்கக் கண்டத்து எலிகள் என 31 அரிய வகை விலங்குகளைச் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாகத் தஞ்சாவூரைச் சேர்ந்த பயணியை ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இந்த அரிய வகை விலங்குகளில், குரங்குகள் எலிகள் ஆகிய 18 அரிய வகை உயிரினங்கள், உயிரிழந்து விட்டன. 2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட 13 அரியவகை விலங்குகள், தாய்லாந்து நாட்டிற்கு உயிருடன் திருப்பி அனுப்பப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கிலிருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று (நவ.4) சனிக்கிழமை இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில், வந்த பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, தஞ்சாவூரைச் சேர்ந்த குருசாமி சுதாகர் (44) என்ற பயணி, மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தனர். மேலும் அவருடைய உடைமைகளைப் பரிசோதித்தனர். அவர் வைத்திருந்த பெரிய பைக்குள், அரிய வகை மலைப்பாம்பு உள்ளிட்ட வெளிநாட்டு விலங்குகள், இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

உடனடியாக பயணி குருசாமி சுதாகரை வெளியில் விடாமல், நிறுத்தி வைத்து விட்டு, சென்னை பெசன்ட் நகரில் உள்ள, ஒன்றிய குற்றப் புலனாய்வு, வன பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, அரிய வகை வெளிநாட்டு விலங்குகளை ஆய்வு செய்தனர்.

அதில், 2 வெளிநாட்டு மலைப் பாம்பு குட்டிகள், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்கு குட்டிகள், 26 அரிய வகை ஆப்பிரிக்கக் கண்டத்து எலிகள் மொத்தம் 31 விலங்குகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அதில், 3 ஆப்பிரிக்க அரிய வகை குரங்குகளும், 15 ஆப்பிரிக்கக் கண்டத்து அரிய வகை எலிகளும் ஏற்கனவே உயிரிழந்த நிலையிலிருந்தன. 2 மலைப்பாம்பு குட்டிகளும், 11 அரிய வகை எலிகள் என 13 அரிய வகை உயிரினங்கள் மட்டுமே உயிருடன் இருந்தன.

இதனையடுத்து, உயிருடன் இருந்த 2 மலைப்பாம்புகள் குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களைத் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும், உயிரிழந்த அரிய வகை குரங்குகள் எலிகளை, செங்கல்பட்டு பகுதியில் உள்ள தனியார் பாய்லர் ஆலைக்கு எடுத்துச் சென்று மிகுந்த பாதுகாப்பான முறையில் எரித்து அளித்தனர்.

அதேபோல், இன்று (நவ.5) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னையிலிருந்து, பாங்காக் சென்ற தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் 2 மலைப்பாம்பு குட்டிகள் உட்பட 13 அரிய வகை உயிரினங்களைத் தாய்லாந்து நாட்டுக்கு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். அதற்கான செலவுத் தொகையை, இந்த அரிய வகை வனவிலங்கு கடத்தி வந்த பயணி, குருசாமி சுதாகரிடம் வசூல் செய்தனர்.

மேலும், சுங்க அதிகாரிகள் அரிய வகை வன உயிரினங்களை உரிய அனுமதி இன்றி வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்த பயணி, குருசாமி சுதாகரை கைது செய்து, சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க: பஸ்சில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.