சென்னை: பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர், தினேஷ் (26). இவர் கடந்த ஜூன் மாதம் பட்டாபிராம் ரயில்வே தண்டவளாத்தில் ஏற்பட்ட விபத்தினால் இரண்டு கால்களையும் முட்டிக்கு மேலும் இழந்தார். அதனைத் தொடர்ந்த சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு செயற்கைக் கால் பாெருத்தப்பட்டு தற்பொழுது தானாக நடக்கிறார்.
இது குறித்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வரும், மருத்துவக்கல்வி இயக்குநருமான சாந்தி மலர் கூறும்போது, “சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான தினேஷ். இவர் கடந்த ஜூன் மாதம் பட்டாபிராம் ரயில்வே தண்டவளாத்தில் ஏற்பட்ட விபத்தினால் இரண்டு கால்களையும் முட்டிக்கு மேல் பகுதி வரை இழந்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறையின் மூலம் அவருக்கு செயற்கைக்கால் பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
இவருக்கு முட்டிக்கு மேல் கால் பாதிக்கப்பட்டு அகற்றப்பட்டதால், நவீனத் தொழில் நுட்பத்தில் செயற்கைக்கால் உருவாக்கப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தில் பொருத்தப்பட்டது. அவர் தற்பொழுது இயல்பாக நடக்கிறார். மேலும் இவர் சிறு, குறுத் தொழில்களை செய்ய முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா குறித்து இழிவான பேச்சு: திருச்சி மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள்