ETV Bharat / state

விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணம்! - மாரடைப்பால் மரணம்

மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனே செல்லவிருந்த விமான பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் சென்னை விமானநிலையத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் பயணி ஒருவர் திடீர் மாரடைப்பால் மரணம்

author img

By

Published : Nov 13, 2022, 6:38 AM IST

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் டைட்டல் மேத்தா (61). இவர் மங்களூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்தார்.

சென்னையில் இருந்து புனே செல்லும் மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவருடைய சொந்த ஊரான புனே செல்லவிருந்தார். இதையடுத்து டைட்டல் மேத்தா வெளியில் செல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலேயே அமர்ந்திருந்தார்.

அதன்பின்பு இன்று அதிகாலை 4 மணியளவில் புனே செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான போா்டிங் பாஸ் இண்டிகோ ஏா்லைன்ஸ் கவுண்டரில் வாங்கியுள்ளார். பின்பு பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராகினார். அதன்பின் விமானத்தில் ஏறுவதற்காக, கேட் எண் 13 அருகே சென்றபோது, திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதை அடுத்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்து, விமான நிலைய ஊழியர்களுக்குத் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய ஊழியா்கள் விரைந்து வந்து அவரை சென்னை விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார் என்று அறிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தி.மலை அருகே விவசாய பணியின் போது மின்னல் தாக்கியதில் பெண் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.