ETV Bharat / state

சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண் மீது தாக்குதல்; தட்டிக்கேட்ட போலீஸுக்கு சாவி குத்து - போலீஸ் மீது தாக்குதல்

வேளச்சேரியில் சாதி மறுப்புத் திருமணம் செய்த தங்கையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட வந்த அண்ணன் தங்கையை தாக்கியதை, தட்டிக்கேட்க சென்ற உதவி ஆய்வாளரையும் அந்த அண்ணன் சாவியால் குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார்.

A man who tried to escape after attacking the police with a sharp weapon was arrested
கலப்பு திருமணம் செய்த தங்கை மீது தாக்குதல்; தட்டிகேட்ட போலீசுக்கு சாவி குத்து
author img

By

Published : Feb 8, 2023, 10:28 PM IST

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர், ஷாலினி(36). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வீரமணி என்பவரை காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துள்ளார். இதனால் இவரது குடும்பத்தார், அவரிடம் பேசாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஷாலினியை அவரது அண்ணன் சதீஷ் உள்ளிட்ட குடும்பத்தார் வந்து தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த ஷாலினி சைதாப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த குடும்பப் பிரச்னை தொடர்பாக வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்று, வேளச்சேரி காவல் உதவி ஆய்வாளர் அருண் என்பவர், சம்பவ இடத்திற்குச் சென்று ஷாலினியின் அண்ணன் சதீஷ் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துள்ளார்.

அப்போது மது போதையில் இருந்த சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தார் விசாரணைக்கு வரமுடியாது எனக் கூறி போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சதீஷ் கையில் வைத்திருந்த கூர்மையான சாவியால், உதவி ஆய்வாளர் அருணை குத்திவிட்டு, தப்பி ஓட முயன்றுள்ளார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உதவியோடு தப்பியோட முயன்ற சதீஷை மடக்கிப் பிடித்த உதவி ஆய்வாளர் அருண், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். காயமடைந்த உதவி ஆய்வாளர் அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினார்.

குடும்பத் தகராறு குறித்து விசாரணை மேற்கொள்ள சென்ற உதவி ஆய்வாளரை, இளைஞர் சாவியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி ஆய்வாளர் அருணை தாக்கிய விவகாரத்திலும், காதல் திருமணம் செய்த தன்னை குடும்பத்தார் தாக்கியதாக ஷாலினி கொடுத்தப்புகாரிலும் என இரண்டு வழக்குகள் பதிவு செய்து, சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்வீட் கடையை அரிவாளால் சூறையாடிய இளைஞர் - நெல்லை டவுனில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.