ETV Bharat / state

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னை வானிலை ஆய்வு மையம்! - காற்றழுத்த தாழ்வு பகுதி

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:29 PM IST

சென்னை இன்று (13.09.2023) காலை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: போதைக்கு அடிமையாகும் அரசு பள்ளி மாணவர்கள் - வேதனை தெரிவிக்கும் ஆசிரியர்கள்!

மழை அளவு: கடந்த 24-மணி நேரத்தில், விழுப்புரம் வானூர் பகுதியில் அதிகபட்சமாக 9 செ.மீ மழையும் கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் 4 செ.மீ முதல் 7 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்று தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதே போல் இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கடலூர் மத்திய சிறையில் தினமும் ஒலிக்கும் பாட்டு கச்சேரி; பயிற்சி எடுக்கும் சிறை கைதிகள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.