ETV Bharat / state

எங்கேயும் காதல்: மனநல காப்பகத்தில் பூத்த காதல்; நோயாளியாய் வந்தவர்கள் நாளை இணையர்களாக! - love story

மனநல சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு வந்த இருவர், வாழ்க்கையில் தம்பதியராக இணைகின்றனர். இந்த காதல் ஜோடி குறித்த சிறப்புக்கட்டுரையினைக் காணலாம்.

மனநல காப்பகத்தில் பூத்த காதல் கதை
மனநல காப்பகத்தில் பூத்த காதல் கதை
author img

By

Published : Oct 27, 2022, 9:37 PM IST

சென்னை: காதலிப்பதற்கு என பல கோட்பாடுகளை இந்த உலகம் விதித்திருந்தாலும், அவ்வப்போது காதல் அதனை உடைத்தெறிந்து காதலுக்கு, காதலிப்பதற்கு மனமிருந்தால் போதும் என்பதை மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறது. அதன் வரிசையில் மனநல காப்பகத்திற்கு சிகிச்சைக்கு வந்து, தன் வாழ்க்கைக்காண காதலைத்தேர்ந்தெடுத்த இருவரின் காதல் கதை தான் இது.

மனநல சிகிச்சைக்காக இரண்டு ஆண்டுகள் முன்பு, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வந்த சென்னையைச்சேர்ந்த 42 வயதான மகேந்திரன், வேலூரைச்சேர்ந்த 36 வயதான தீபா காப்பகத்திலேயே சந்தித்து பழகி காதல் செய்து, நாளை வாழ்க்கை துணையாக இணையப் போகின்றனர்.

குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட பதற்றத்தின் மூலம் மகேந்திரனுக்கு 'Bipolar Affective Disorder' எனும் மனநலப்பாதிப்பு ஏற்பட்டது. தந்தை இறந்த சோகத்தால் தீபாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இருவரும் சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு சந்தித்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, ஒருவரையொருவர் புரிந்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து மகேந்திரன் நம்மிடத்தில் கூறும்போது, 'எனது குடும்ப சொத்துப்பிரச்னையால் மனநலம் பாதிக்கப்பட்டு, முதலில் சிகிச்சைப்பெறுவதற்கு வந்தேன். அப்போது மருத்துவர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளாமல் சிகிச்சைப்பெறுவதற்கு மறுத்தேன். மீண்டும் மருத்துவமனையில் வந்து சேர்ந்து சிகிச்சைப் பெற்றேன். அதன் பின்னர், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 'டே கேர் சென்டரில்' பணிபுரிந்து வந்தேன்.

அப்போது தான் அங்கு சிகிச்சைப் பெறுவதற்காக தீபா வந்தார். அவரை, சிறப்பாக கவனித்துக்கொண்டேன். அவரைப் பார்த்தபோதே எனக்குப்பிடித்துவிட்டது. பின்னர், ஒருநாள் அவரிடம் என்னைத்திருமணம் செய்து கொள்கிறாயா? எனக்கேட்டேன். அதற்கு அவர் சிறிது கால அவகாசம் கேட்டார். பின்னர், அவரே வந்து திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறினார்.

தீபாவை முதன்முறையாக பார்த்தபோதே எனது அம்மா மாதிரி இருந்தார். எனது அம்மா ஒரு ஆசிரியர், பழகிய பிறகு தான் தெரியும் தீபாவும் ஒரு ஆசிரியை என்று. இதனால், எனது வாழ்க்கையில் உள்ள அனைத்து உறவும் தீபாவின் உருவில் கிடைத்ததுபோல தோன்றுகிறது. மருத்துவமனையில் தரும் ஊதியத்தை வைத்து வாழ்க்கையை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்''எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து நம்மிடத்தில் பேசிய தீபா, 'எனது தந்தை 2016ஆம் ஆண்டில் இறந்தார். அவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டேன். அதனைத்தொடர்ந்து மனநல சிகிச்சைக்கு வந்தேன். அப்போது என்னைப் பார்த்து மகேந்திரன் திருமணம் செய்துகொள்ளலாமா? எனக்கேட்டார். நான் அதற்கு கால அவகாசம் கேட்டேன்.

மனநல காப்பகத்தில் பூத்த காதல் கதை

தற்பொழுது நாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். எனது வாழ்க்கையில் திருமணம் நடைபெறும் என்றெல்லாம் நான் கனவில் கூட நினைக்கவில்லை. இது ஒரு அதிசயமாக தோன்றுகிறது. எனது தந்தை 13 வயது வரையில், பொதுவெளியில் கூட என்னை நடக்க கூட விடாமல் பார்த்துக்கொண்டார். நான் கல்லூரியில் படிக்கும்போதும் எனக்கு உதவியாக தொடர்ந்து இருந்தார்.

அதனால், அவரின் இறப்பை என்னால் தாங்க முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டேன். ஒருவர் மீது அளவிற்கு அதிகமாக அன்பு வைத்திருப்பவர்கள் இயற்கை எய்தும்போது அதனை தாங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் பணிக்குப் படித்து இருப்பதால், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவர் சங்கீதா கூறும்போது, 'மகேந்திரன், தீபா இருவரும் திருமணம் செய்துகொள்வதாக எங்களிடம் கூறினர். அவர்களின் விருப்பப்படி செய்துகொள்ள அனுமதி வழங்கினோம். இவர்கள் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சைப்பெற வேண்டும் எனக்கூறியுள்ளோம்.

இவர்களது வாழ்க்கையைத் தொடங்குவதற்காக புதிதாக வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டுக்கு தேவையான பொருட்களை காப்பகப்பணியாளர்கள், நண்பர்கள் வாங்கிக்கொடுத்துள்ளனர். எங்களின் வீட்டு திருமணம்போல் செய்து வைக்க உள்ளோம். தீபா ஒரு ஆசிரியருக்கு படித்து இருப்பதால், அவர் மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மனநல காப்பகம் சென்று ஒருவரது வாழ்க்கை எப்படியெல்லாமோ மாறியதுண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இங்கு ஒளி இல்லாமல் தவித்தவரின் வாழ்வில் சூரியனே வந்து ஒளி தந்தது போல் இயற்கை ஒரு அதிசயத்தை காதலாகத் தந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் நாளை சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி அழகன் தலைமையில் மருத்துவமனையிலேயே திருமணம் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இருந்து தன் காதலனை தேடி முர்ஷிதாபாத் வந்த பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.