ETV Bharat / state

கல்லூரி மாணவரை வெட்டிய 5 பேர் கொண்ட கும்பல்.. சென்னையில் பயங்கரம்! - The gang who hacked Diwakar in Chennai

சென்னையில் பட்டப்பகலில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கல்லூரி மாணவரை விரட்டி சென்று துணிக்கடைக்குள் வாடிக்கையாளர் முன்பே கல்லூரி மாணவரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பயங்கரம்: கல்லூரி மாணவரை வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்!

author img

By

Published : Feb 22, 2023, 9:31 PM IST

சென்னை: பெரவள்ளூர் கே.சி.தோட்டம் 5வது தெருவைச் சேர்ந்தவர் திவாகர்(17). இவர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு திவாகரின் வீட்டருகே வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்ட திவாகர் இங்குச் சண்டை போடக்கூடாது எனக்கூறி ரகளையில் ஈடுபட்ட நபர்களிடம் அறிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த குடிபோதை கும்பல் இன்று திவாகரை பின் தொடர்ந்து வந்துள்ளனர். திவாகர் கல்லூரி சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய சமயத்தில், பேப்பர் மில்ஸ் சாலையில் காத்திருந்த கும்பல் திவாகரை கத்தியால் வெட்ட துரத்தியுள்ளனர்.

சுமார் 1 கி.மீ. வரையிலும், திவாகரை அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்றபோது, பயத்தில் அந்த சாலையில் இருந்த பிரபல துணிக்கடைக்குள் புகுந்த திவாகர் ஆடை மாற்றும் அறையில் சென்று கதவைப் பூட்டிக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் அந்த கும்பல் விடாமல் விரட்டி சென்று கதவை உடைத்து திவாகரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடி உள்ளனர்.

சம்பவம் குறித்து துணிக்கடை ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், திருவிக நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த திவாகரை மீட்டு அரசு பெரியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக திரு.வி.க.நகர் போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பவன், கங்கா, குள்ளா, அமர் மற்றும் உமர் ஆகிய ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டியது தெரியவந்துள்ளது. பட்டப்பகலில் கல்லூரி மாணவரை விரட்டி சென்று துணிக்கடைக்குள் புகுந்து வாடிக்கையாளர் முன்பு கல்லூரி மாணவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:இணையத்தில் மாணவியின் ஆபாச போட்டோ பதிவிட்ட உறவினர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.