சென்னை பெரம்பூர் வீனஸ் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(25). இவர் ஏழு வருடங்களாக வேப்பேரி டவுட்டன் மேம்பாலம் கீழே உள்ள பிளாட்பாரத்தில் நந்தினி(35) என்பவருடன் தங்கி வந்துள்ளார். இவர்கள் இருவரும் தேவாலயத்தில் தூய்மைப் பணியாளர்களாக இருந்தனர்.
மேலும், இருவருக்கும் குடி பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நந்தினி குளித்துக் கொண்டிருக்கும்போது முருகன்(40) என்பவர் பார்த்ததாக கூறி கார்த்திக், நந்தினி ஆகியோர் குடிபோதையில் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது திடீரென கார்த்திக் தான் கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து உடல், கழுத்து பகுதிகளில் அறுத்துள்ளார். இதில், கழுத்து நரம்பு அறுபட்டு சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி காவல் துறையினர் கார்த்திக் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு - காவல்துறை விசாரணை!