ETV Bharat / state

தியேட்டருக்கு வெளியே தொழிலதிபர் கார் மீது தாக்குதல்.. சென்னை நடந்தது என்ன? - தொழிலதிபரின் சொகுசு காரின் கண்ணாடியை உடைத்தவர்

சென்னையில் நந்தனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தின் இயக்குநரது சொகுசு காரின் கண்ணாடியை உடைத்த பல் மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

உடைந்த சொகுசு கார் கண்ணாடி
உடைந்த சொகுசு கார் கண்ணாடி
author img

By

Published : Aug 2, 2023, 12:54 PM IST

படம் பார்க்க வந்த தொழிலதிபரது சொகுசு காரின் கண்ணாடியை உடைத்த பல் மருத்துவர்

சென்னை: நந்தனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நிறுவனத்தின் இயக்குநர் நேற்றிரவு தனது பென்ஸ் காரில் அவரது குடும்பத்தாருடன் சென்னை தியாகராய நகரில் உள்ள திரையரங்கில் திரைப்படத்தை பார்க்கச் சென்றுள்ளனர். அவர்களது கார் ஓட்டுநர் சேகர் என்பவர் அவர்களை திரையரங்கில் இறக்கி விட்டு திரையரங்கின் அருகே உள்ள கோயில் முன்பாக காரை நிறுத்தி விட்டு நின்றுள்ளார்.

அப்பொழுது அங்கு மது போதையில் இருந்த நபர் ஒருவர் அங்கு இருந்த குப்பைகளை ஒன்று சேர்த்து அதனை எரிக்க முயன்று உள்ளார். இதனை கண்ட கார் ஓட்டுநர் சேகர், இங்கு குப்பைகளை எரிக்கக் கூடாது எனக் கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி சாலையிலேயே கட்டிப்பிடித்து சண்டையிட்டு உள்ளனர். இந்த மோதலில் மது போதையில் இருந்த நபருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கல்லால் பென்ஸ் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளார். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு நிலவியது. மேலும் இருவரும் மாறி மாறி சாலையில் தாக்கிக் கொள்வதை பார்த்த பொதுமக்கள், காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் அவரை பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. தனியார் நிறுவன உரிமையாளர் கைது!

விசாரணையில் அவரது பெயர் மனோஜ் (வயது 47) என்பதும், பல் மருத்துவர் என்பதும் (US Return) யூஎஸ் ரிட்டன் என்பதும் தெரிய வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ரகளையில் ஈடுப்பட்டவரை சமாதானப்படுத்தி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் படம் பார்த்து முடித்து வந்த தொழில் அதிபரின் குடும்பத்தார் கார் கண்ணாடி உடைந்து இருப்பதையும், டிரைவரின் சட்டை கிழிந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் வேறு வாகனத்தில் ஏறி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் சேகரிடம் புகாரை பெற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் காவல் ஆய்வாளர் ஆனந்த பாபு அங்கு நின்று வீடியோ எடுத்து கொண்டிருந்தவர்களிடம், எங்களை பணி செய்யவிடுங்கள் என்றும் நாங்களும் மனிதர்கள் தானே எனவும் கடிந்து கொண்டு செல்போன்களை பிடுங்க முற்பட்டதால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: அவசரத்திற்கு உதவிய நண்பனை கொள்ளை வழக்கில் கோர்த்து விட்ட திருடன்… சென்னையில் சுவாரஸ்ய சம்பவம்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.