சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் கடந்த 26ஆம் தேதி திடீரென காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்றனர். இதில் இளம்பெண், தலையில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், பலத்த காயங்களுடன் இருந்த இளைஞரை ரயில்வே காவல்துறையினர், மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலம் உடற்கூராய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து மாம்பலம் ரயில்வே காவல் ஆய்வாளர் வைரவன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
இந்த விசாரணையில், மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் (20) கல்லூரி மாணவன் எனவும், உயிரிழந்தவர் பள்ளி மாணவி ஆதம்பாகம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. மேலும், இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், இதற்கு தங்களின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இவ்வாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று இளங்கோ சிகிச்சை பலனின்றி இன்று (பிப்.1) உயிரிழந்தார். மேலும், உடற்கூராய்விற்கு பின் உடலை அவர்கள் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை - வார்டு உறுப்பினர்கள் பதிவு ராஜினா