ETV Bharat / state

7 ஆம் வகுப்பு சிறுவன் ஆட்டோவில் கடத்தல்.. சாதுர்யமாக தப்பித்து ஓட்டம்..

சென்னையில் ஆட்டோ கடத்தப்பட்ட 7 ஆம் வகுப்பு சிறுவன் சாதுர்யமாக தப்பித்து வந்தான். அதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

7 ஆம் வகுப்பு சிறுவன் ஆட்டோவில் கடத்தல்.. சாதுர்யமாக தப்பித்து ஓட்டம்..
7 ஆம் வகுப்பு சிறுவன் ஆட்டோவில் கடத்தல்.. சாதுர்யமாக தப்பித்து ஓட்டம்..
author img

By

Published : Oct 27, 2022, 11:17 AM IST

சென்னை: கொண்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் ஷர்மா (42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மித்திலேஷ் குமார் ஷர்மா (12), கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் மித்திலேஷை தினமும் ஆட்டோ ஓட்டுநர் சீனிவாசன் என்பவர், பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று (அக் 26) மதியம் 2.30 மணியளவில் பள்ளி முடிந்த பின்பு, மாணவர்களை அழைத்து செல்ல வழக்கம்போல் ஆட்டோ ஓட்டுநர் வந்துள்ளார். அப்போது சிறுவன் மித்திலேஷை ஆட்டோவின் அருகே நிற்க கூறிவிட்டு, மற்ற மாணவர்களை அழைத்து வர ஓட்டுநர் பள்ளிக்குள் சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஆட்டோ அருகே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுவனை தாக்கி அவரது ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற ஆட்டோவில் இருந்து கீழே குதித்த சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

பின்பு பச்சையப்பன் கல்லூரி மெட்ரோவில் ஏறிய சிறுவன், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த காவல்துறையினரிடம் செல்போன் பெற்று தனது தாத்தாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் சிறுவனின் பெற்றோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து, சிறுவனை மீட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதேநேரம் கடத்தல் பயத்தில் சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை அரவிந்த் ஷர்மா, கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் பள்ளி வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், சிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்ட திட்டமிட்டனரா அல்லது தொழில் போட்டி காரணமாக கடத்தப்பட்டரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோழி திருடிய சிசிடிவி பதிவை ஏன் கொடுத்தீங்க.. கோவில்பட்டி அருகே அரிவாளுடன் வந்து மிரட்டல்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.