சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வழக்கம்போல சந்தேகத்துக்கிடமான பார்சல்கள் மட்டும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, எழும்பூரில் பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸில் ஏறுவதற்காக வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிலேஷ் என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததால் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 2 பைகளில் 94,23,500 ரூபாய் பணத்தைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அவரிடம் 94,23,500 ரூபாய்க்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி உள்ளனர். ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் சென்னையில் தங்க நகைகள் வாங்குவதற்காக இந்தப் பணத்தைக் கொண்டு வந்ததாக பிடிபட்ட நபர் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சென்னை ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்த 94,23,500 ரூபாய் பணத்தை வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையர் பாலச்சந்திரனிடம் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் ஒப்படைத்தனர்.
இதேபோன்று சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும்போது குண்டூரைச் சேர்த்த சாம்பசிவராவ் என்பவரிடம், 100 கிராம் எடை கொண்ட 8 தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டனர்.
இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். 100 கிராம் தங்கக்கட்டிகளுகான எந்த விதமான ஆவணங்களும் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வருமான வரித்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு