சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 2021-2022ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 11ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 3ஆயிரத்து 166 மாணவர்கள், 3ஆயிரத்து 507 மாணவியர்கள் என மொத்தம் 6ஆயிரத்து 673 மாணாக்கர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதில் 2ஆயிரத்து 70 மாணவர்கள், 3ஆயிரத்து 104 மாணவியர்கள் என மொத்தம் 5ஆயிரத்து 174 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 77.54 ஆகும். பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் வணிகவியல் பாடத்தில் 1, கணக்கு பதிவியல் பாடத்தில் 5, மற்றும் கணினி பயன்பாடுகள் பாடத்தில் 3 மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 9 மாணவ, மாணவியர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 95.41 விழுக்காட்டுடன் முதலிடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 94.50 விழுக்காடுடன் இரண்டாம் இடத்தையும், மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 93.81 விழுக்காடுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பம்