ETV Bharat / state

நான்கு வழிச்சாலை பணிகள் 70 விழுக்காடு முடிவு: அமைச்சர் எ.வ.வேலு

author img

By

Published : Mar 24, 2022, 1:04 PM IST

சென்னை - கன்னியாகுமரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் சுமார் 70 விழுக்காடு முடிவடைந்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 24) நேரம் இல்லா நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ், "கன்னியாகுமரி - சென்னை இடையே நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு தெடங்கப்பட்ட பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான விவசாயிகள் அர்ப்பணிப்புடன் தங்களது நிலங்களை வழங்கினர்.

இந்நிலையில் தற்போது அந்தப் பணிகள் முடிவடையவில்லை. சுமார் 20 கோடி ரூபாய் வரை நிலத்தை வழங்கிய விவசாயிகளுக்கு பணம் வழங்கவில்லை" என்றார். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தமிழ்நாடு-கேரள எல்லையான வில்லுக்குறி - களியக்காவிளை சாலை, நாகர்கோவில் - காவல்கிணறு இடையே சாலை என இரண்டு சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகள் துறை சார்பில் சுமார் 850 கோடி ரூபாய் செலவில் எல் அண்ட் டி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்த சாலை பணிகள் தற்போது 70 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. தற்போது சாலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த சாலை அமைந்துள்ள இடங்களில் மலை பாதுகாப்பு மண்டலம், சுற்றுச்சூழலால் மரங்களுக்கு பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் கிராவல் மண் எடுக்க தடை விதித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து சாலை அமைப்பதற்கான கிராவல் மண், ஜல்லி ஆகியவற்றை சாலை அமைக்க கூடிய ஒப்பந்த நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எல் அண்ட் டி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மண், ஜல்லி போன்றவற்றை எடுத்து சாலைகளை அமைப்பதன் மூலம் தங்களுக்கு இழப்பு ஏற்படும்.

எனவே மேற்கண்ட நிறுவனம் மறு டெண்டர் விடுமாறு தேசிய நெடுஞ்சாலை நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் மாநில அரசின் சார்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பாக மறு டெண்டர் விடப்படும் என உறுதி அளித்துள்ளார். சென்னை - கன்னியாகுமரி இடையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் சுமார் 70 விழுக்காடு முடிவடைந்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க: நடிகை கவுதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.