ETV Bharat / state

சென்னையில் ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - ஒருவர் கைது! - ஹவாலா பணம் வைத்திருந்த ஒருவர் கைது

சென்னையில் கட்டுக் கட்டு கட்டாக ஹவாலா பணத்தை எடுத்துச் சென்ற சகாபுதின் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

lakhs
lakhs
author img

By

Published : Jan 22, 2023, 8:14 PM IST

சென்னை: சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்குட்பட்ட கடற்கரை சாலையில் இன்று(ஜன.22) காலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டல் எதிரே இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அருகே போலீசார் சென்றபோது அவர்கள் ஓட ஆரம்பித்தனர்.

அவர்களில் ஒருவரை பிடித்த போலீசார், அவரிடமிருந்த பையை சோதனை செய்தனர். கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் ஏதேனும் இருக்கும் என்ற சந்தேகத்தில் சோதனை செய்த போலீசாருக்கு பையை திறந்ததும் அதிர்ச்சி ஏற்பட்டது. காரணம் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது.

இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த சகாபுதின் (57) என்றும், அவர் வைத்திருந்தது கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஹவாலா பணத்தை ஒப்படைத்தனர். பின்னர் சகாபுதினை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த நபர் - போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.