சென்னையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக வெடி விபத்து, தீயினால் காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 10 படுக்கை வசதி கொண்ட சிறப்பு மருத்துவ வார்டு அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
இந்த சிறப்பு தீக்காய வார்டில் ஒரு மருத்துவப் பேராசிரியர் உட்பட மூன்று மருத்துவர்களை பணியில் அமர்த்தி, தீவிர சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன
சென்னையில் தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் தீக்காயம் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என 31 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 24 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இதையும் படிங்க:தீபாவளியன்று டெல்லியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து!