ETV Bharat / state

பி.இ, பி.டெக் படிப்பில் சேர 62,800 பேர் விண்ணப்பம்! - be, b.tech

சென்னை: பி.இ, பி.டெக். படிப்பில் சேர 62,800 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

62,800 பேர் விண்ணப்பம்
author img

By

Published : May 8, 2019, 3:12 PM IST

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 2ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையடுத்து, தற்போது மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர். இதுவரை 62,800 மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, விருப்பப்பாடம் மற்றும் கல்லூரி தேர்வு ஆகிய அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஸ்கிரீன் ஷாட் மூலம் வழிகாட்டுதல்கள் மற்றும் காலஅட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுவரை 1.90 லட்சம் மாணவர்கள் இணைதளத்தை பார்வையிட்டு, புரிந்துகொண்டு எந்தவித சந்தேகமுமின்றி தொடர்ந்து தங்களது பதிவுகளை முழுமையாக செய்து வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பி.இ, பி.டெக். படிப்பில் சேர 
62,800 மாணவர்கள் விண்ணப்பம்  

சென்னை, 
 பி.இ, பி.டெக்  படிப்பிற்கு  இதுவரை 62,800 மாணவர்கள்  பதிவு செய்துள்ளனர் என தொழில்நுட்பக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
பி.இ, பி.டெக்.. பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 2 ந் தேதி துவங்கி 31 ந் தேதி வரை நடைபெறுகிறது.  மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.  
 இந்நிலையில்  தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொழில் நுட்பக் கல்வித் துறையின் மூலம் நடத்தப்படும்  பி.இ,பி.டெக். சேர்க்கைக்கான ஆன்லைன்  கலந்தாய்விற்கான இணையதள பதிவு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.  இது வரை 62,800 மாணவர்கள்  சேர்க்கைக்கான பதிவுகளை செய்துள்ளனர். 
இணையதள கலந்தாய்வு பணி ஏற்பாடுகளை, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை   மற்றும் தேசிய தகவல் மையம்  ஆகிய அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய அதிகாரிகளின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையுடனும், பல்வேறு அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் குழுவின் அறிவுரைப்படியும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, விருப்பப்பாடம் மற்றும் கல்லூரி தேர்வு ஆகிய அனைத்து தகவல்களும்  மாணவர்களுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் ஸ்கிரீன் ஷாட் மூலமாக வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.   இதுவரை 1.90 லட்சம் மாணவர்கள் இணைதளத்தை பார்வையிட்டு,  புரிந்துக் கொண்டு எந்தவித சந்தேகமுமின்றி தொடர்ந்து தங்களது பதிவுகளை முழுமையாக செய்து வருகின்றனர்.
 மாணவர்கள்  தங்கள் விண்ணப்பப்படிவத்தை உரிய காலத்தில் இணையத்தில் பதிவு செய்ய லாம் என அதில் கூறியுள்ளார். 
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.