ETV Bharat / state

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்! - 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டித்து

சென்னை: தமிழ்நாட்டில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கல்வித்துறையின் அறிவிப்பைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

வேல்முருகன்
author img

By

Published : Sep 17, 2019, 8:49 PM IST

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் வேல்முருகன், "மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை திட்டத்தை கொண்டுவந்து கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த கருத்துக்கேட்பு கூட்டங்களும், குளிரூட்டப்பட்ட அறையில் குறிப்பிட்டவர்களை மட்டும் வைத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் எடப்பாடி அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மாநில அரசும் இதை நடைமுறைப்படுத்த முன்வராத நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் மாணவர்களின் கல்வியை பறித்து இடைநிற்றல்களை அதிகரிக்கும். அவ்வாறு இடைநிற்றல்கள் அதிகரித்தால் மாணவர்கள் அவர்களின் தந்தை பார்க்கும் வேலையையே மேற்கொள்ளக்கூடும். குறிப்பாக, இந்த புதிய கல்விக் கொள்கை என்பது குலக்கல்வி திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதுமட்டுமின்றி பிஞ்சு குழந்தைகள் தங்கள் இளம் வயதில் நுழைவுத்தேர்வுகளை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் மனநிலை என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள். எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அவர்களே நீங்கள் மீண்டும் தேர்தல் என்று தெருவில் இறங்கி மக்களிடம் செல்ல வேண்டும் என்றால், இந்த நுழைவுத்தேர்வுத் திட்டங்களை கைவிடுங்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கிறேன். அப்படி இல்லையென்றால் அனைத்து தரப்பு மாணவர்களையும் திரட்டி அனைத்து அமைச்சர்களையும் முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க:

'ஒரே சாதி என்று மட்டும் மோடி சொல்ல மாட்டார்..!' - வேல்முருகன் காட்டம்

Intro:Body:தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் கருத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

அப்போது பேசிய அக்கட்சி தலைவர் வேல்முருகன், “மத்திய அரசு புதிய கல்வி கொள்கை திட்டத்தை கொண்டுவந்து கருத்துக்களை கேட்டு வருகிறது. அந்த கருத்துகேட்பு கூட்டங்களும் குளிரூட்டப்பட்ட அறையில் குறிப்பிட்டவர்களை மட்டும் வைத்து கேட்கப்பட்டு வருகிறது. இந்த புதிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை மத்திய அரசுக்கு சேவகம் செய்யும் எடப்பாடி அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் எந்த அரசும் இதை நடைமுறைப்படுத்த முன்வராத நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பொதுத்தேர்வுகள் மாணவர்களின் கல்வியை பறித்து இடைநிற்றல்களை அதிகரிக்கும். அவ்வாறு இடைநிற்றல்கள் அதிகரித்தால் மாணவர்கள் அவர்களின் தந்தை பார்க்கும் வேலையே மேற்கொள்ள கூடும். ஆகவே தான் இந்த புதிய கல்வி கொள்கை என்பது குலக்கல்வி திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறோம். அதுமட்டுமின்றி பிஞ்சு குழந்தைகள் தங்கள் இளம் வயதில் 5 நுழைவுத்தேர்வுகளை சந்திக்க நேர்ந்தால் அவர்களின் மனநிலை என்னவாகும் என்பதை நினைத்து பாருங்கள். எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம் அவர்களே நீங்கள் மீண்டும் தேர்தல் என்று தெருவில் இறங்கி  மக்களிடம் செல்ல வேண்டும் என்றால் இந்த நுழைவுத்தேர்வு திட்டங்களை கைவிடுங்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கிறேன். அப்படி இல்லையென்றால் அனைத்து தரப்பு மாண்வர்களையும் திரட்டி அனைத்து அமைச்சர்களையும் முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். 

கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டிற்கு உங்கள் அமைச்சர் பெருமக்கள் சென்று வந்துள்ளனர். சிறந்த கல்வியை எவ்வாறு வழங்குவது என்பதை பற்றி பின்லாந்து போன்ற நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்திரா காந்தி ஆட்சி கால்த்தின் போது கல்வி மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. தற்போது அது மத்திய பட்டியலுக்கு மாற்றப்படும் வகையில் மருத்துவத்துக்கு நீட் என்று கொண்டு வந்ததை போல் அனைத்து உயர்கல்வி திட்டங்களும் நீட்டை கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். இதன்மூலம் கல்வியை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோள். இந்த திட்டங்களை திரும்ப பெறும்வரை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பல் போராட்டங்களை முன்னெடுக்கும். 
மாணவர்களுக்கு இன்னும் பாடபுத்தகம், சீருடை முறையாக் வழங்கப்படாத நிலையில் பொதுத்தேர்வுக்கு என்ன அவசியம் வேண்டியதிருக்கிறது. பள்ளிகளில் முறையான வகுப்பறைகள், கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொள்ள வேண்டும். புதிய கல்வி கொளகை திட்டம் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு பின் தான் செயலப்டுத்தப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படியிருக்கு நுழைவுத்தேர்வுகள் நடத்துவதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் தற்போது ஏன் அறிவித்தார். தங்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை காப்பாற்றிகொள்ள தமிழக அமைச்சர்கள் மாணவர்களை பலிகொடுக்க பார்க்கின்றனர். சென்னையில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகளுக்கு 3 முதல் 10 லடசம் வரை கட்டண கொள்ளைகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சௌம், செயலாளரும் அதை கண்டறிந்து முதலில் நெறிபடுத்துங்கள்.

மாவீரன் குரு ஓராண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு எழுப்பியுள்ள மணிமண்டப நிகழ்ச்சி அழைப்பில் குரு குடும்பத்தினரின் ஒருவர் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. மாவிரன் குருவுக்கு மணிமண்டபம் எழுப்புவதில் அவரின் குடும்பத்துக்கும் மக்களுக்கும் எந்தவித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை.

பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் பேனர் வைத்தவர்களை கைது செய்யாமல் பேனரை அச்சிட்ட அச்சகத்துக்கு சீல் வைப்பது சம்பந்தப்பட்டவரை காப்பற்றவே என்பது தான் தமிழக வாழ்வுமிமைக் கட்சியின் பார்வை. பேனர் வைக்ககூடாது என்பதே எங்களின் நிலைப்பாடு. அந்த வகையில் தற்போது நடந்துகொண்டிருக்கும் இந்த போராட்டத்து பேனர்களோ கொடி கம்பங்களே எதுவும் பொருத்தப்படவில்லை.

நன்றி மறந்தவர்கள் தமிழர்கள் என்று நண்றியை மறந்து பேசும் அளவுக்கு முன்னாள் மத்திய இணை அமைச்சர் அண்ணாச்சி பொன். ராதாகிருஷ்ணனை ஃபாசிசம் மற்றியுள்ளது என்பது கவலை அளிக்கிறது. தமிழர்களின் பெருமைகள், நற்குணங்களை மோடிக்கும் அமித் ஷாவுக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் எடுத்துக்கூற வேண்டும். தமிழ் தொன்மை வாய்ந்தது என்பதால் தான் அதை நிரூபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்ச்சிகள் கைவிடப்பட்டுள்ளன, அதன் இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.   

  Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.