ETV Bharat / state

சென்னையில் முகக்கவசம் அணியாத 5,971 பேர் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Jan 9, 2022, 6:15 PM IST

சென்னை பெருநகரில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, முகக்கவசம் அணியாத  5 ஆயிரத்து 971 நபர்களிடம் இருந்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 11 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
வழக்குப்பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று, ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ளது. நோய் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுவெளியில் வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

சென்னை பெருநகரில் நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலையங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மார்க்கெட் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், கடை வீதிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் தீவிரமாக கண்காணிப்பட்டு வருகின்றன.

கண்காணிப்பு பணியில் காவல்துறையினர்
கண்காணிப்பு பணியில் காவல்துறையினர்

அந்த வகையில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி, கடந்த ஜன.7ஆம் தேதி முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் சென்ற 5 ஆயிரத்து 971 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவுசெய்து, 11 லட்சத்து 94 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமாக வசூலித்தனர்.

அதேபோல் நேற்று(ஜன.8) இரவு ஊரடங்கின்போது விதிமுறைகளை மீறியது தொடர்பாக 318 வழக்குகளும், தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காதது தொடர்பாக 53 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 761 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பெரியார் சிலை அவமதிப்பு - கோவையில் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.