ETV Bharat / state

இன்று 5000... நாளை 50,000...! - பம்பரமாய் சுழலும் மா.சு. - முதலமைச்சர் ஆலோசனைப்படி

தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ. 13) ஐந்தாயிரம் இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. நாளை (நவ. 14) தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
author img

By

Published : Nov 13, 2021, 11:53 AM IST

சென்னை: வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஐந்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும், இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிட்ட பின்னர் நடத்தப்படும் என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார் .

சென்னை தேனாம்பேட்டையில், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்ககத்தில் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மிகப்பெரிய அளவில் பெய்துள்ளது. அதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது, அந்த நீரை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகின்றது.

முதலமைச்சர் தொடர்ந்து கடந்த ஆறு நாள்களாக நடவடிக்கைகள் மேற்கொண்டும், மீட்புப் பணிகளையும் செய்துவருகிறார். மழைக் காலத்தைத் தொடர்ந்து மக்கள் பாதிப்புக்குள்ளாகிற காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் மருத்துவ முகாம்களை நடத்திட வேண்டுமென்றும் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம்
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

தமிழ்நாட்டில் நேற்று (நவ. 12) 75 தனியார் மருத்துவமனைகள் சார்பில் சென்னையில் 164 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி முடித்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் நேற்று முந்தினம் (நவ. 11) ஒரே நாளில் ஆறாயிரத்து 115 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்கள் வாயிலாகவும், மூன்றாயிரத்து 122 நடமாடும் வாகனங்களின் மூலமும் மருத்துவம் அளித்ததில் இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 143 பேர் பயன் அடைந்திருக்கின்றனர்.

மருத்துவ முகாம்கள்
மருத்துவ முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ. 13) ஐந்தாயிரம் இடங்களில் மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்கள் சென்னையில் 750 இடங்களில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 14) தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

மெகா தடுப்பூசி முகாம்

முதலமைச்சர் ஆலோசனைப்படி
முதலமைச்சர் ஆலோசனைப்படி

தமிழ்நாட்டில் முதல் தவணை தடுப்பூசி 78 விழுக்காட்டினரும், இரண்டாவது தவணை தடுப்பூசியை 33 விழுக்காட்டினரும் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் 69 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

இரண்டாவது தவணை தடுப்பூசியை 70 லட்சம் பேர் செலுத்த வேண்டி இருக்கிறது. இவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இவர்களுக்கு மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி 1966ஆம் ஆண்டு 50 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1968ஆம் ஆண்டு 50 மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்து 100 மாணவர்களைக் கொண்டும், 2004ஆம் ஆண்டு 50 மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்து 150 மாணவர்கள் என்று மருத்துவக் கல்லூரி நடத்தப்பட்டுவந்துள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

திமுக ஆட்சி

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தபிறகு, கோவை மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதலாக 50 இடங்களில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஏற்கனவே 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆயிரத்து 450 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒன்பதாயிரத்து 150 இடங்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. ஒன்றிய அரசு 15 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு அறிவிப்பு செய்தவுடன் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வு தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சூர்யாவின் படம் தியேட்டர்களில் திரையிட்டால் கொளுத்துவோம் - காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.