ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் 50 விழுக்காட்டிற்கும் மேல் பெண்களுக்கு வாய்ப்பு! - பெண்களுக்கு வாய்ப்பு!

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள், அதாவது 50 விழுக்காட்டிற்கும் அதிகமான வார்டுகளில் பெண்கள் போட்டியிடலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்
author img

By

Published : Jun 4, 2019, 10:05 AM IST

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து திமுக தொடுத்த வழக்கினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் சிறப்பு அலுவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

தற்போது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த ஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வேண்டும். அதன்படி, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு வெளியிட்டுள்ளது.

இந்தப் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற ஆறு வகையாகப் பிரித்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி, எந்தெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிடலாம் ஆகிய விவரங்கள் தரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை அதில் உள்ள 200 வார்டுகளில் பொதுப்பிரிவு (பெண்கள்) 89 வார்டுகளும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு (பொதுப்பிரிவு) 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்டோர் (பெண்கள்) 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள, 79 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு எந்த இடங்களும் இட ஒதுக்கீட்டில் இல்லை.

இந்த முறை சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்களில் போட்டியிட பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை // வி.டி. விஜய் // உள்ளாட்சி தேர்தல்

சபாஷ் சென்னை! 

உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதத்துக்கும் மேல் பெண்களுக்கு வாய்ப்பு  

உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 105 வார்டுகள் அதாவது 50 சதவீதத்துக்கும் அதிகமான வார்டுகளில் பெண்கள் போட்டியிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து திமுக தொடுத்த வழக்கினால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் சிறப்பு அதிகாரிகள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீடானது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட்ட வேண்டும். அதன்படி விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள  14 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான இட ஒதுக்கீடு வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற ஆறு வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்ததெந்த வார்டுகளில் யார் யார் போட்டியிலாம் ஆகிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. 

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அதில் உள்ள 200 வார்டுகளில் பொது பிரிவு (பெண்கள்) 89 வார்டுகளும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு (பொதுப்பிரிவு) 16 வார்டுகளும், தாழ்த்தப்பட்டோர் (பெண்கள்) 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 79 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு எந்த இடங்களும் இட ஒதுக்கீட்டில் இல்லை.  

ஆனால் சென்னை மாநகராட்சியில் கடந்த முறை பெண்களுக்கு 67 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெண்கள் (பொது பிரிவு)க்கு 58 வார்டுகளும், தாழ்த்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு 9 வார்டுகளும் வழங்கப்பட்டிருந்தன. இது மொத்தமுள்ள இடங்களில் 33 சதவீதமாகும். இந்த முறை சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீதத்துகும் அதிகமான இடங்களில் போட்டியிட பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.