ETV Bharat / state

+2 மாணவர்களுக்கு ஜாக்பாட்.. கணித தேர்வில் இந்த கேள்விக்கு முயற்சி செய்திருந்தேலே 5 மார்க்! - educational news in tamil

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் கணக்கு பாடத்தில் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால், 5 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

‘இந்த கேள்விக்கு பதில் எழுதுனீங்களா.?.. 5 மார்க் கட்டாயம் உண்டு..!

author img

By

Published : Apr 8, 2023, 7:27 PM IST

சென்னை: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வில் கணக்கு பாடத்திற்கான தேர்வு, மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிலும் 5 மதிப்பெண் வினாக்களில் ஒன்று, தவறாக இருப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக பகுதி 4 வினா எண் 47 (ஆ) - நீல வட்டத்தின் சமன்பாடு மற்றும் நேர்கோட்டின் சமன்பாடு ஆகியவை குறித்து கேட்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் கணித பாடத்தில் கேட்கப்பட்டிருந்த பகுதி 4 வினா எண் 47 (ஆ) என்ற கேள்வியில் தவறுகள் இருப்பதால், மாணவர்கள் அந்த கேள்விக்குரிய விடையை எழுத முயற்சி செய்திருந்தால், 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என அரசுத் தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக 2022 - 2023ஆம் கல்வி ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள், 1 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் 3,185 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 982 மாணவர்கள், 7 ஆயிரத்து 728 மாணவிகள் என மொத்தமாக 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், தனித் தேர்வர்களில் 14 ஆயிரத்து 966 மாணவர்கள், 8 ஆயிரத்து 776 மாணவிகள், 5 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 23 ஆயிரத்து 747 மாணவர்கள் 134 தேர்வு மையங்களில் தேர்வெழுதுவதாகவும் தகவல் அளிக்கப்பட்டது.

மேலும் இவர்களைத் தவிர, மாற்றுத்திறனாளிகளில் 2 ஆயிரத்து 925 மாணவர்கள், 2 ஆயிரத்து 281 மாணவிகள் என 5 ஆயிரத்து 206 பேரும், வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய 8 சிறைச்சாலைகளில் 90 சிறைவாசிகள் தேர்வு எழுதுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் மொழித் தேர்வை 50,674 பேர் எழுத வரவில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வு எழுத வராத மாணவர்களை பள்ளிகள் மூலம் கண்டறிந்து மறுதேர்வு எழுத வைக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்பட பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘வரும் கல்வி ஆண்டு முதல் 75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால் மட்டுமே பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்’ என தெரிவித்தார்.

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் கணக்கு பாடத்தில் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால், 5 மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

மேலும் பல்வேறு முக்கிய பாடங்களான இயற்பியல், பொருளியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய தேர்வுகளை 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 6) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: +2 தேர்வு விடை குறிப்புகள் சமூக வலைத்தளங்களில் கசிவு: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.