இதுதொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு முழுவதும் வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை, 32,705 பேர், 28 நாட்கள் கண்காணிப்பு முடித்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று ஒருநாள் மட்டும் 48 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 738 பேரில் 553 பேர் சமய மாநாடு ஒன்றிற்குச் சென்று திரும்பியவர்கள். இதுவரை அந்த மாநாட்டிற்குச் சென்று திரும்பிய 1,480 பேர் தாங்களாகவே முன்வந்து மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 53 லட்சம் பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். அரசு மருத்துவர்கள், செவிலியருக்குத் தேவையான பாதுகாப்புக் கவசம், முகக்கவசம் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 21 கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
ராமநாதபுரம் கீழக்கரைச் சம்பவத்திற்குப் பிறகு, கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சையிலிருந்து உயிரிழப்பவர்களின் உடல் உடனடியாக அவரது உறவினர்களிடம் வழங்கப்படமாட்டாது. இறந்தவரின் உடல் முழுப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதுசார்ந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றப் பின்னர்தான் உறவினர்களிடம் உடல் வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க...ரயில்பெட்டிகளை கரோனா வார்டுகளாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!