அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 76 இந்தியர்களும், சாா்ஜாவிலிருந்து 178 இந்தியர்களும் துபாயிலிருந்து 180 இந்தியர்களும், இலங்கையிலிருந்து 37 இந்தியர்களும் நான்கு சிறப்பு மீட்பு தனி விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டனர்.
இவர்களுக்கு விமானநிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் இவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களுக்கும், இலவச தங்கும் இடங்களுக்கும் அனுப்பப்பட்டனர்.