சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம், திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(43). இவர் சென்னை துறைமுகத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இந்நிலையில், ஜனவரி 20ஆம் தேதி வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டிவிட்டு கீழ்தளத்தில் வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் கோபாலகிருஷ்ணன் உறங்கிக் கொண்டிருந்தார். பின்னர், மறுநாள் காலை எழுந்து மாடிக்கு சென்று பார்த்தபோது, அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 40 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து எம்.கே.பி. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.