ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 393 மருத்துவ முகாம்கள்! - medical camps during corona period

சென்னை: மாநகராட்சி முழுவதும் இன்று(அக்.24) ஒரே நாளில் 393 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவமுகாம்கள்
மருத்துவமுகாம்கள்
author img

By

Published : Oct 24, 2020, 11:00 PM IST

வட சென்னை பகுதிகளில் குறைந்த கரோனா வைரஸ் பரவல் தற்போது கோடம்பாக்கம், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் அதிகமாக பரவிவருகிறது.

இந்தத் நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும் சுகாதாரத் துறையும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது கபசுரக் குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நாள்தோறும் 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரே நாளில் மட்டும் 393 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 49 மருத்துவ முகாம்களும், அண்ணா நகரில் 41 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன.

இன்று (அக்.,24) நடைபெற்ற 303 மருத்துவ முகாம்களில் மொத்தம் 17 ஆயிரத்து 703 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 540 நபர்கள் அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

கடந்த மே 8ஆம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 63,629 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 31,95,156 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அரியாத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.